பெங்களூரு, கர்நாடகா: தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் சமன் செய்வதை work life balance என அழைக்கிறார்கள். அதாவது வேலைக்கும் குடும்பத்திற்கும் சமமாக நேரத்தை செலவிடுவது. ஆனால் இப்படி நேரம் கிடைப்பதில்லை என தொழிலாளர்களும் ஊழியர்களும் கூறி வருகின்றனர்.
வாரத்தில் 4 நாட்கள் வேலைக்கு மாறும் மேலைநாடுகள்: மேற்கத்திய நாடுகள் எல்லாம் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் வேலை என ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாறி வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறாக இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் பணி நேரங்களை உயர்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் தான் மாநில அரசு தங்களுடைய தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுத்தது. இதன்படி ஆந்திர மாநிலத்தில் வேலை நேரம் என்பது 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆந்திராவில் 10 மணி நேர வேலை: தொழில்துறையினர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தாலும் தொழிலாளர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது . ஆந்திராவில் தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் ,உற்பத்தியைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வேலை நேரத்தை அதிகரிப்பதாக ஆந்திர மாநில அரசு விளக்கம் தந்திருக்கிறது. இருந்தாலும் தொழிலாளர்கள் தரப்பில் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.
வேலை நேரத்தை உயர்த்தும் கர்நாடகா: இந்த சூழலில் கர்நாடக மாநில அரசும் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 9 மணி நேர வேலை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடக மாநில அரசு தங்களுடைய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதன்படி தற்போது இருக்கக்கூடிய 9 மணி நேர வேலை என்பது 10 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியது.

வாரம் 48 மணி நேரம் வேலை கட்டாயம்: கர்நாடக அரசு கொண்டுவரக்கூடிய இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அந்த மாநிலத்தில் தொழிலாளர்களின் வேலை நேரம் என்பது 9 நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்படும். இதன் மூலம் அவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகி இருக்கிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது .
மத்திய அரசின் அறிக்கை: ஆனால் கர்நாடக அரசு மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிவிக்கையை சுட்டிக் காட்டி அதன் அடிப்படையில் தான் வேலை நேரத்தை உயர்த்துகிறோம் என தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் வேலை நேரம் தொடர்பான விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற மத்திய அரசு அறிக்கையை சுட்டிக்காட்டி கர்நாடக மாநில அரசு தங்கள் மாநிலத்தில் வேலை நேரத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறது.
எந்தெந்த மாநிலங்களில் 10 மணி நேர வேலை?:ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யக்கூடிய சத்தீஸ்கர் ,குஜராத், மகாராஷ்டிரா ,உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 10 மணி நேர வேலை திட்டம் அமலில் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு தான் மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளே தொழிலாளர்களின் வேலை நேரம் தொடர்பான முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. தற்போது அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கர்நாடக மாநில அரசு பணி நேரத்தை உயர்த்த முடிவு செய்திருக்கிறது .
ஓவர் டைம்: கர்நாடக மாநிலத்தில் ஓவர் டைம் எனப்படும் கூடுதல் நேர பணிக்கான கால வரையறை தற்போது மூன்று மாதங்களுக்கு 50 மணி நேரமாக இருக்கிறது அதனை 144 மணி நேரமாக உயர்த்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருக்கிறது . அது தவிர கர்நாடக மாநில அரசு ஒரு நாளைக்கான பணி நேரத்தை ஓவர் டைமுடன் சேர்த்து 10 மணி நேரமாக வைத்திருக்கிறது, அதனை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது.
சிறு கடைகளுக்கு பொருந்தாது: கர்நாடக மாநிலத்தில் 10 மணி நேர வேலை என்ற சட்டம் நடைமுறைக்கு வரும்போது உணவகங்கள் ,மதுபான விடுதிகள், மதுபான கூடங்கள் ,அலுவலகங்கள் மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பத்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட கடைகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications