மும்பை: கர்நாடக மாநிலம் பெங்களூருவை தொடர்ந்து தற்போது மும்பை நகரமும் தண்ணீர் பிரச்சனையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த கோராய் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

அண்மையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுமக்களும், அங்கே அலுவலகங்களை அமைத்துள்ள நிறுவனங்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின. பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதே போல மும்பை நகரிலும் தண்ணீர் பிரச்சனை தலை தூக்க தொடங்கியுள்ளது. மும்பை மாநகராட்சியின் கீழ் வரக்கூடிய கோராய் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய 5 ஆயிரம் குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் கோராய் கிராமத்தை சேர்ந்த மக்கள் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.
அடிப்படைத் தேவைகளுக்கான தண்ணீரை கூட லாரிகளில் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதற்காக ஒரு குடும்பம் ஒரு 7000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
லாரிகளில் தண்ணீர் வேண்டும் என முன்பதிவு செய்தாலும் தங்களுக்கு உரிய நேரத்தில் அவை கிடைப்பதில்லை என்றும், தற்போது தண்ணீருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மும்பையில் உள்ள கோராய் கிராமத்தை தவிர நாசிக் பகுதியிலும் கடந்த சில நாட்களாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.
குறிப்பாக நாசிக் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நாசிக் முனிசிபாலிட்டி வேறு இடங்களில் இருந்து குடிநீரை வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த தண்ணீர் பிரச்சனையானது அதிகரிக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாசிக் பகுதிக்கு தேவையான தண்ணீர் கங்காபூர் அணையிலிருந்து திருப்பி விடப்படுவது வாடிக்கை. ஆனால் வேளாண்மை உள்ளிட்ட தேவைகளுக்காக தண்ணீர் திருப்பி விடப்பட்டது மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
புனேவிலும் இதே சூழல் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகள் வற்றி போய் விட்டதால் மக்கள் லாரிகளில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் ஏப்ரல் 24ஆம் தேதி வரை மும்பை நகரம் முழுவதும் குடிநீர் வினியோகம் 5% குறைக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல் டெல்லியில் குளிக்க மற்றும் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஷாஹதாரா பகுதியில் (Shahdara) உள்ள விஸ்வாஸ் நகர் (Vishwas Nagar) பகுதிவாசிகள் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் புகார்கள் அளிக்கப்பட்ட பிறகு, டெல்லி ஜல் நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கடந்த இரண்டு மாதங்களில் இந்த பகுதிக்கு தினசரி 20,000 முதல் 35,000 லிட்டர் வரை தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications