டெல்லி: வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு செல்ல வேண்டுமெனில் பிஐஎஸ் தரச்சான்றிதழை பெறுவது கட்டாயமாகும்.
இந்நிலையில் வியட்நாமை சேர்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பிஐஎஸ் தரச் சான்றிதழ் கோரி நீண்ட காலமாக விண்ணப்பித்து காத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மின்ட் (Mint) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வியட்நாமை சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் பிஎஸ்ஐ தரச் சான்றிதழ் கிடைப்பது சிரமமாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வியட்நாமை சேர்ந்த 20க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தியாவின் பிஐஎஸ் தரச் சான்றிதழை பெறுவதற்காக பல மாதங்களாக காத்திருக்கின்றன என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலமுறை இது தொடர்பாக வியட்நாம் அரசாங்கம் மத்திய அரசை தொடர்பு கொண்டு பேசி இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
வியட்நாம் வர்த்தகத் துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் நாட்டை சேர்ந்த 26 நிறுவனங்கள் இந்தியாவின் பிஐஎஸ் தரச் சான்றிதழுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தரச் சான்றிதழ் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தரச் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்படுத்துவது இருநாட்டுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பை கேள்விக்குறியாக்குவதாக வியட்நாம் அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதுபோல இந்தியாவின் பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற காத்திருக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை ஷூ மற்றும் ஸ்டீல் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும். வியட்நாம் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு இந்திய உற்பத்தியாளர்களும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது.
அண்மையில் இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்கள், வியட்நாமிலிருந்து பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவற்றில் தரமற்ற பொருட்களும் இருக்கின்றன எனவும் மத்திய அரசிடம் தங்களது கவலையை பதிவு செய்திருந்தன.
தற்போது வெளிநாட்டு பொருட்களின் தரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் தரமான பொருட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் பிஐஎஸ் சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் சீன நாட்டு நிறுவனங்கள் முதலிடத்திலும் வியட்நாம் நாட்டு நிறுவனங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா வியட்நாம் இடையிலான இருநாட்டு வர்த்தகம் என்பது 2022-23 ஆம் நிதி ஆண்டில் 14.70 பில்லியன் டாலர்களை எட்டியது. இதில் 8.8 மில்லியன் டாலர் வியட்நாமிலிருந்து இந்தியாவிற்கும், 5.9 பில்லியன் டாலர் இந்தியாவிலிருந்து வியட்நாமிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தகமாகும்.
தரச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் குறித்து வியட்நாம் அரசு கவலை தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு பிஐஎஸ் அமைப்பிடம் இதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு கேட்டுள்ளதாம்.
ஸ்டீல், ஷூ, பாலியஸ்டர், டையர், ரசாயனங்கள், பொம்மை, பேட்டரிகள், பிளைவுட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பிஐஎஸ் தரச் சான்றிதழுக்கான காத்திருக்கின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications