2019 இல் உலக மக்கள் அனைவருக்கும் உயிர் பயத்தைக் காட்டிய கொரோனா தொற்று முதலில் சீனாவிலிருந்து தான் பரவியது என கூறப்படும் நிலையில், சீனாவில் கொரோனாவுக்கு பின்பு பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
அந்நாட்டில் இன்னும் தொற்று பயம் இருப்பதாலும், தொற்று காலத்தில் அதிகப்படியான இறப்புகளை சந்தித்ததாலும் சீனாவில் உழைக்கும் மக்கள் எண்ணிக்கையில் 4 கோடி பேரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரமாக இருந்த சீனா கொரோனா தொற்றால் பெரும் முட்டுக்கட்டை விழுந்தது.
கோவிட்-19!
2019 முதல் உலகையே ஆட்டிப்படைத்த கோவிட்-19 சீனாவின் ஒரு இறைச்சி மார்க்கெட்டில் இருந்துதான் வந்ததாக தகவல்கள் பரவலாக உள்ளன. அச்சமயம் சீனாவில் மட்டும் இருந்த இப்பயங்கர தொற்றுநோய் மெல்ல மெல்ல உலகமெங்கும் பரவி கொத்து கொத்தாக மக்களின் உயிரைப் பறித்தது.
ஆனால் அனைத்து நாடுகளும் அதற்கான மருந்துகளை கண்டுபிடித்து அத்தொற்றிலிருந்து வெளியேறி மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. ஆனால் சீனாவில் இன்னும் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து மீளவில்லை.
சீனாவின் வேலையில்லாத் திண்டாட்டம்!
தொற்று நோய் பரவல் காரணமாக சீனாவின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், அதேநேரத்தில் நல்ல உழைக்கும் வர்கத்தினரின் எண்ணிக்கையில் தொற்று காலங்களில் இறப்பு காரணமாக குறைந்துள்ளதாகவும் ஹாங்காங்கைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை ஆய்வாளரான ஸ்டூவர்ட் கீடெல்-பாஸ்டன் அவர்கள் கூறியுள்ளார்.
வேலையாட்கள் பற்றாக்குறை!
சீன நாட்டின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டு சீனாவில் சுமார் 774.7 மில்லியன் மக்கள் பணியமர்த்தப்பட்டனர் என்றும், ஆனால் 2022 இல் அந்த எண்ணிக்கை குறைந்து 733.5 மில்லியன் மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு அழுத்தத்தை உண்டாக்கும் எனவும் கூறியுள்ளது.
இது ரிட்டையர்மெண்ட் காலம்!
சீனாவின் மனிதவள மற்றும் சமூக பாதுகாப்பு துணை அமைச்சர் யு ஜியாடோங், நாட்டில் உழைக்கும் மக்கள் எண்ணிகை குறைந்து, ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சீன நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022 இல் 4.2% ஆக உயர்ந்துளது
கட்டுக்குள் வந்த கோவிட்-19 தொற்று!
சீனாவில் தற்போது கோவிட்-19 தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மக்கள் அவர்களின் வேலைக்கு திரும்பியுள்ளனர், ஆனால் முழுமையாக மீளவில்லை. இதன் மூலம் சீனாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை இனி உயரக்கூடும் என சீனப் பொருளாதார நிபுணர் லாரி ஹூ கூறியுள்ளார்.
உழைக்கும் மக்கள்தொகை
மேலும் சீனாவில் 16 முதல் 59 வயத்திற்குட்பட்ட நபர்களின் எண்ணிகையானது 2012 ஆம் ஆண்டு முதலே படிப்படியாக குறைந்து வருவதாகவும், அதுமட்டுமின்றி இந்த வயதுடைவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மில்லியன் குறைந்து தற்போது 857.6 மில்லியனாகக் குறைந்துள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன.
ஓய்வுபெறும் வயது
சீனாவில் சிறப்பான மருத்துவ வசதிகள், உணவு பழக்கம், ஆரோக்கியம் சார்ந்து பல முயற்சிகளை மக்களும், அரசும் இணைந்து எடுக்கப்பட்ட நிலையில் சீன மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தாலும் கூட, சீனாவின் வொயிட் காலர் ஜாப் பிரிவில் ஓய்வுபெறும் வயது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கு 60 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் மாறாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications