இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளுக்கு நிகராக தனியார் வங்கிகளும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. இந்த சூழலில் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி திடீரென தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸ் அளவை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது .
மினிமம் பேலன்ஸ்: கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தங்களுடைய வங்கியில் பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கியவர்களுக்கு மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பாக 50,000 ரூபாயை பராமரிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. முதலில் 10,000 ரூபாய் என இருந்த மினிமம் பேலன்ஸை திடீரென 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

திடீரென உயர்த்தியது:அதேபோல சிறுநகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த மினிமம் பேலன்ஸ் 25 ஆயிரம் ரூபாய் என்றும் கிராமப் பகுதிகளுக்கு இது 5000 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது. ஐசிஐசிஐ வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக நகர்ப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் 50 ஆயிரம் ரூபாயை சராசரியாக பராமரிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஐசிஐசிஐ வங்கியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சூழலில் ஐசிஐசிஐ வங்கி தங்களுடைய மினிமம் பேலன்ஸ் அறிவிப்பை மாற்றி அமைத்து இருக்கிறது . இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் நாங்கள் மினிமம் பேலன்ஸ் அளவை நகர் பகுதிகளுக்கு 15,000 ரூபாயாக குறைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முடிவை மாற்றியது: எனவே ஐசிஐசிஐ வங்கியில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் நகர்ப்புறங்கள் மற்றும் பெருநகரங்களில் வசிப்பவர்கள் என்றால் அவர்கள் மாதம் தோறும் மினிமம் பேலன்ஸ் ஆக 15,000 ரூபாய் பராமரிக்க வேண்டும் .இதுவே சிறுநகரங்களில் வசிப்பவர்கள் என்றால் 7500 ரூபாயும், கிராமப் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் 2500 ரூபாயாகவும் பராமரித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி திடீர் மாற்றம்: ஐசிஐசிஐ வங்கி தங்களுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட மதிப்பு மிக்க கருத்துக்களை தொடர்ந்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் இந்த மினிமம் பேலன்ஸ் அளவை திருத்தி இருக்கிறோம் .வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் கருத்துகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளது.
மாதாந்திர மினிமம் பேலன்ஸ் 50,000 ரூபாய் என ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து ஹெச்டிஎஃப்சி வங்கியும் தங்களின் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸை 25,000 ரூபாய் என உயர்த்தியது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications