டெக் உலகின் தற்போது சிம்சொப்பனமாக இருப்பது ஏஐ, பெரும் டெக் சாம்ரஜ்ஜியங்களை தாண்டி சிறு சிறு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏஐ சேவைகளையும், LL-களையும் அறிமுகம் செய்து மிகப்பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று ஆதிக்க நிலையை அடைவது தான் தற்போதையை முக்கிய இலக்காக உள்ளது.
இந்த ஏஐ ரேசில் கூகுளின் ஜெமினி, ஒப்பன்ஏஐ-ன் சாட்ஜிபிடி, டிவிட்டரின் க்ராக், சீனாவின் டீப்சீக், ஆன்த்ரோபிக், கர்சர் ஆகியவை தற்போது டெக் உலகிலும், மக்கள் மத்தியிலும் அதிக பேசப்படும், பயன்படுத்தப்படும் சில தளமாக உள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் க்ராக் தற்போது டிவிட்டர் வாடிக்கையாளர்கள் மட்டுமே அதிகமாக பயன்படுத்தும் வேளையில், வாடிக்கையாளர் குடையை விரிக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.

டெலிகிராம் செயலியின் சிஇஓ பவெல் டுரோவ், எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்துடன் ஒரு வருட கூட்டணி ஒப்பந்தத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் எலான் மஸ்க்-ன் மாபெரும் திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், xAI இன் 'க்ராக் 3' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு எளிதாக பயன்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பம் டெலிகிராமின் அனைத்து செயலிகளிலும் ஒருங்கிணைக்கப்படும் என பவெல் டுரோவ்தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி, உலகின் மிகச் சிறந்த AI தொழில்நுட்பத்தை டெலிகிராம் பயனர்களுக்கு வழங்குவதற்கான முக்கிய முயற்சியாக அமையும் எனவும் பவெல் டுரோவ் பெருமையுடன் பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவைற்றின் தாய் நிறுவனமான மெட்டா தனது லாமா LLM மூலம் இயங்கும் ஏஐ சேவைக்காக தனி செயலியை அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக தற்போது க்ராக் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டெலிகிராம்-ல் இணைக்கப்பட உள்ளது.
xAi உடனான கூட்டணி டெலிகிராமின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். xAI நிறுவனத்திடமிருந்து டெலிகிராமிற்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் மற்றும் பங்கு முதலீடு கிடைக்கும்.
மேலும், டெலிகிராம் மூலம் விற்கப்படும் xAI சப்ஸ்கிரிப்ஷன் வருவாயில் 50% பங்கு டெலிகிராமிற்கு வழங்கப்படும். இந்த நிதி ஆதரவு, டெலிகிராமின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், பயனர் அனுபவத்தை உயர்த்துவதற்கும் உதவும்.
எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான xAI உருவாக்கிய க்ராக் 3 பூமியிலேயே மிகவும் புத்திசாலியான AI என தொடர்ந்து விளம்பரம் செய்து வரப்படுகிறது. இது 2025 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது டிவிட்டரிலும், தனி தளமாகவும் இயங்கி வருகிறது.
க்ராக் 3, கணிதம், அறிவியல் மற்றும் கோடிங் பென்ச்மார்க் தரநிலைகளில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜெமினி, டீப் சீக் நிறுவனத்தின் V3 மாடல், ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் மற்றும் ஓபன் AI இன் GPT-4o ஆகியவற்றை மிஞ்சுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
டெலிகிராம் உடனான கூட்டணி என்பது xAi-க்கு பல நாடுகளில் இருந்து புதிய வாடிக்கையாளர்களை பெற்று தரும், குறிப்பாக ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும். இதன் மூலம் எலான் மஸ்க் வாடிக்கையாளர் அடிப்படையில் ஜெமினி, சாட்ஜிபிடி உடனும் போட்டிப்போட முடியும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications