உலகிலேயே 200 பில்லியன் டாலருக்கும் (16 லட்சம் கோடி) அதிகமான சொத்து மதிப்பு கொண்ட மூன்றாவது நபர் என்ற பெருமை பேஸ்புக் நிறுவனர் மற்றும் மெடா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பர்கிற்கு கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் 200 பில்லியன் டாலர்களைக் கொண்ட பணக்காரர்கள் என்ற பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க், மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகிய இரண்டு பேர் மட்டுமே உலகிலேயே 200 பொல்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட நபர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தனர்.

இந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய மார்க் ஜூக்கர்பர்க். நடப்பு ஆண்டில் மட்டும் இவர் கூடுதலாக 72.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தினை சேர்த்துள்ளார்.
ப்ளூம்பெக் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மார்க் தான் நடப்பாண்டில் அதிக சொத்து சேர்த்த பெரும் பணக்காரராக இருக்கிறார. நடப்பு ஆண்டில் 72.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக சேர்த்ததன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
எனவே 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டு மூன்றாவது நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. அடுத்தபடியாக என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹூவாங் நடப்பாண்டில் தன்னுடைய சொத்தில் கூடுதலாக 58 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார்.
தற்போதைய சூழலில் உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நபராக எலன் மஸ்க் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர்கள் ஆகும். 2ஆவது இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இவர் 216 பில்லியன் டாலர்கள் கொண்டுள்ளார். தற்போது மூன்றாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க் இருக்கிறார்.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் எல்விஎம்ஹச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னாட் அர்னால்ட் 200 பில்லியன் சொத்துக்கள் கொண்ட தனி நபர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவருடைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு நடப்பாண்டில் சுமப்பது 16 சதவீதம் குறைந்தது , இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர்கள் என சரிவடைந்தது.
மார்க் ஜூக்கர்பர்க்கிற்கு நடபாண்டில் கிடைத்த சொத்தின் பெரும் பகுதி மெட்டா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததன் மூலமே கிடைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டா நிறுவனத்தை தொடங்கிய போது மார்க் ஸக்கர்பர்குக்கு 1 டாலர் மட்டுமே ஊதியமாக கிடைத்தது.
தற்போது ஊதியம் மட்டுமில்லாமல் மெட்டா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளுக்கும் இவர் உரிமையாளராக இருக்கிறார் .மெட்டா நிறுவனத்தின் 345 மில்லியன் பங்குகள் இவருக்கு சொந்தமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நடப்பு ஆண்டில் அவருக்கு 24.4 மில்லியன் டாலர்கள் ஊதிய தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications