ஏற்கனவே பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை தாறுமாறாக அதிகரித்திருக்கும் நிலையில், FMCG நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளான சோப்பு, ஷாம்பூ, பால், பிஸ்கட் போன்ற பொருட்களின் விலையை அதிகரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் அடுத்த பேரிடியாய் இனிவரும் காலங்களில் கரண்ட் பில் கட்டணமும் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி அத்தாரிட்டி மின் வாரியத்திற்கு ஒரு புதிய பரிந்துரையை வழங்கியுள்ளது. அதன்படி வீட்டில் ஒருவர் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்பதை கருத்தில் கொள்ளாமல், பிக்சட் சார்ஜ் எனும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது. அதாவது ஒருவர் குறைவான மின்சாரமே பயன்படுத்தி வந்தாலும், அவர்களும் இந்த பிக்சட் சார்ஜ் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.
ஏன் இந்த முடிவு?: டைம்ஸ் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன் படி மின் விநியோக நிறுவனங்கள் சில காலமாக நஷ்டத்தை சந்தித்து வருகிறதாம். இதை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கரண்ட் பில் ஏறிவிடுமோ என்ற பயத்தில் சிலர் தங்கள் வீடுகளில் ரூஃப் டாப் சோலார் பேனல்களை அமைத்து வருகின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களும் சொந்தமாகவே தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்கத் தொடங்கிவிட்டன. இதனால் மின்சார வாரியத்திடமிருந்து மக்கள் பெறும் கரண்டின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் மின்விநியோக நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் குறையத் தொடங்கிவிட்டது. அதை சரி கட்ட வேண்டுமானால், இது போன்ற பிக்சட் சார்ஜ் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் தற்போது மத்திய அரசு இதை பரிசீலித்து வருகிறது. இப்போது ஒவ்வொரு வீடும் எவ்வளவு கரண்டை பயன்படுத்துகிறதோ? அதைப் பொறுத்து மீட்டரில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்த புதிய முறை அமலுக்கு வந்து விட்டால் ஒரு மாதம் நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளியூர் சென்றாலும் அல்லது ஏசி ஓடாமல் வெறும் ஃபேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தாலும் பிக்சட் சார்ஜை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
மின்விநியோக நிறுவனங்கள் தங்களுடைய ஒட்டுமொத்த செலவில் 38 சதவீதம் முதல் 56 சதவீதம் வரையிலான தொகையை மாதம் மாதம் ஊழியருக்கு வழங்கப்படும் சம்பளம், பராமரிப்பு செலவுகள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த பிக்சட் சார்ஜ் கொண்டுவரப்பட்டால் மொத்த வருவாயில் 9 முதல் 20 சதவீதம் வருமானமாக கிடைக்கும்.
இந்த திட்டம் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒரு வேலை அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் மின்கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல செலவுகள் சாமானியர்களின் பட்ஜெட்டை சீர்குலைத்து வரும் நிலையில், மின்சார கட்டணமும் அதிகரித்தால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். அதை எப்படி மக்கள் சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Click it and Unblock the Notifications