நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் போன்ற எட்டு துறைகள் தான் இந்தியாவின் மிக முக்கியமான எட்டு தொழில் துறைகளாக வைத்து இருக்கிறோம்.
இந்த எட்டு துறைகளின் உற்பத்தி தான், இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கிறதாம். இந்த எட்டு துறைகள், இந்திய பொருளாதாரத்தில், அத்தனை முக்கியமானவைகள். இந்த எட்டு துறைகளுக்கான அக்டோபர் 2019 காலத்துக்கான வளர்ச்சி விவரங்கள் நேற்று வெளியாயின.

இந்த எட்டு துறைகளில் சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் தவிர மற்ற ஆறு துறைகளின் உற்பத்தி கொஞ்சம் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. ஒட்டு மொத்தமாக முக்கிய எட்டு துறை உற்பத்திகளை, அக்டோபர் 2018 உடன் ஒப்பிடும் போது, அக்டோபர் 2019 வளர்ச்சி விகிதம் 5.8 % சரிந்து இருக்கிறது.
முதலில் ஏற்றம் கண்ட துறைகளைப் பார்த்துவிடுவோம். உரம் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 11.8 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. அதே போல சுத்திகரிப்பு பொருட்கள் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 0.4 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.
அடுத்து இறக்கம் கண்ட துறைகளைப் பார்த்து விடுவோம். நிலக்கரி - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 17.6 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது.
மின்சாரம் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 12.4 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது. சரிவு கண்ட ஆறு துறைகளில் இந்த இரண்டு துறைகள் தான் அதிக சரிவு கண்டு இருக்கின்றன.
இந்த இரண்டு துறைகளைத் தொடர்ந்து சிமெண்ட் வருகிறது. சிமெண்ட் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 7.7 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது.
இயற்கை எரிவாயு - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 5.7 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது.
கச்சா எண்ணெய் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 5.1 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது.
ஸ்டீல் - கடந்த அக்டோபர் 2018-ல் செய்த உற்பத்தியை விட அக்டோபர் 2019-ல் 1.6 சதவிகிதம் உற்பத்தி சரிந்து இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications