Apple: ஐபோன் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம் சிறிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையில் அதன் கார்ப்பரேட் சில்லறை விற்பனை குழுக்களில், சிறிய அளவிலான எண்ணிக்கையானது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கையால் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட போகிறார்கள். இந்த பணி நீக்கம் எங்கெல்லாம் இருக்கும் என்பது குறித்தான தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. இது குறித்து ஆப்பிள் நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இதுவரையில் வெளியிடவில்லை.
மீண்டும் வேலைக்கு விண்ணப்பியுங்கள்
மற்றொரு அறிக்கையில் ஆப்பிள் ஊழியர்கள் மீண்டும் தங்களது வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அப்படி விண்ணப்பிக்காவிடில் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படலாம் என கூறப்படுவதாகவும் தெரிகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ஏன் பணி நீக்கம்
உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனைக் கடைகளில் செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், வேலையிழப்பு என்பது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது, சர்வதேச அளவிலான பொருளாதாரம் மீண்டும் சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறும் நிலையில் வந்துள்ளது.
மோசமான பொருளாதார சூழல்
ஏற்கனவே வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில் பொருளாதார வளர்ச்சியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய அளவிலான பணி நீக்கத்திற்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏற்கனவே மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் பலவும் மிக பெரியளவிலான பணி நீக்கத்தினை செய்துள்ளன. குறிப்பாக பேஸ்புக், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் என பலவும் இதில் அடங்கும்.
மெட்டா & கூகுள் பணி நீக்கம்
குறிப்பாக மெட்டா நிறுவனம் கடந்த மாதம் இரண்டாவது கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது. இது முதல் கட்டத்திலேயே 11,000 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதே கூகுள் நிறுவனம் 12,000 பேரை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணி நீக்கம் செய்தது. இதே இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இதனை தவிர வேறு வழியில்லை. இந்தப் பணி நீக்கத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு முழுப்பொறுப்பே அவரே என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஊழியர்கள் கவலை
இந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் 27,000 பேரையும், முதல் கட்டமாக 18,000 பேரையும், இரண்டாம் கட்டமாக 9000 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது. இப்படி பல்வேறு நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்திலும் பணி நீக்கம் என்பது இன்னும் என்னவாகுமோ என்ற பதற்றம் ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications