கர்நாடாகா-விற்கு வந்த குஜராத் 'புஷ்பா'.. அடுத்த பிரச்சனை..!

கர்நாடாக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாகும் நிலையில் பல பிரச்சனைகள் இம்மாநிலத்தில் வெடித்து வருகிறது. கடந்த வாரம் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் கர்நாடகாவில் பால் மற்றும் தயிரை விற்பனை செய்வதாக அறிவித்தது. இது கர்நாடக மாநிலத்தின் அரசு பால் நிறுவனமான நந்தினி-யை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது என ஆளும் பிஜேபி கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினரும், பொது மக்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பிஜேபி அரசு அமுல் பிராண்ட் தயாரிப்புகளை கொண்டு வந்து கோடி கணக்கான விவசாயிகள் நம்பியிருக்கும் நந்தினி-யின் வர்த்தகத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் டிவிட்டரில் #SaveNandini கூட டிரெண்டானது.

கர்நாடாகா-விற்கு வந்த குஜராத் 'புஷ்பா'.. அடுத்த பிரச்சனை..!

அமுல் பால் பிரச்சனை தணிந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு தாக்கல் என படு பிசியாக இருக்கும் வேளையில், பால் மற்றும் தயிரை தொடர்ந்து தற்போது குஜராத் மிளகாயும் கர்நாடகாவில் அதிகளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் மிளகாய் சந்தை மிகவும் பெரியது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பான மிளகாய் வகை கொண்டு இருந்தாலும் இப்பிரிவு வர்த்தகத்தில் முன்னோடியாக இருப்பது அந்திராவும், தெலுங்கானாவும் தான்.

ஆனால் குஜராத் மிளகாய் வகையான புஷ்பா தற்போது கர்நாடகாவின் பைடகி மிளகாய்-யின் ஆதிக்கம் நிறைந்த அம்மாநில சந்தைக்குள் நுழைந்துள்ளது. கடந்த சில மாதத்தில் சுமார் 20000 குவின்டால் குஜராத் புஷ்பா மிளகாயை கர்நாடக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளையில் உள்ளூர் சந்தை நிலவரத்தை பொருத்த வரையில் உள்ளூர் டப்பி, காடி மிளகாய் வகைக்கு எந்த வகையிலும் குஜராத் புஷ்பா போட்டிப்போட முடியாது என கூறுகின்றனர்.

இந்திய மிளகாய் உற்பத்தி சந்தையில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மட்டும் சுமார் 60 சதவீத சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இதேவேளையில் கர்நாடகா 10 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மிளகாய் உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது. மேலும் குஜராத் வெறும் 1 சதவீத உற்பத்தியை கொண்டு 7வது இடத்தில் உள்ளது.

கர்நாடாகா-விற்கு வந்த குஜராத் 'புஷ்பா'.. அடுத்த பிரச்சனை..!

பைடகி மிளகாய் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை பயன்படுத்தி அதிக லாபம் பெற சுமார் 70 மிளகாய் விற்பனையாளர்கள் 20000 குவின்டால் மிளகாயை கர்நாடக சந்தையில் வாங்கி குவித்துள்ளனர் என் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதத்தில் குஜராத் புஷ்பா அதிகப்படியான உற்பத்தியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+