அமெரிக்காவின் குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி விசாவின் மீது, இந்த ஆண்டு இறுதி வரைக்கும் அமெரிக்கா தடை விதித்தது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் உள்நாட்டில் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனினும் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் அதுவும் முடியாத நிலையில், அவுட்சோர்ஸிங் பணிகள் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகின்றது.
வாடிக்கையாளர்கள் தங்களது திட்டங்களை வேகமாக டிஜிட்டல் தளங்களுக்கு மாற்றுவதால், அவுட்சோர்ஸிங் ஒப்பந்தங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
பணியமர்த்தல் இருக்குமா?
இது குறித்து வெளியான செய்தியில், சில ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை பார்க்கும் போது புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. ஆக ஐடி நிறுவனங்கள் தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து வேகமாக வெளியே வருவதை காண முடிகிறது. முன்னதாக நிறுவனங்கள் நெருக்கடி நிலையில் உள்ளதால், புதிய பணியமர்த்தல் இருக்குமா இல்லையா? என்ற நிலை இருந்து வந்தது.
ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தல்
இந்த நிலையில் தற்போது ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதாக நிறுவனங்கள் கூறுவதை காண முடிகிறது. எனினும் நிறுவனங்கள் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலையில், நீண்டகால செலவுகளை குறைப்பதற்காக, நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்துவதை சாதகமாக கருதாததால், ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றன.
டிசிஎஸ் பணியமர்த்தல்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் குறைந்திருந்த போதிலும், 40,000 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது டிசிஎஸ் நிறுவனம். ஏற்கனவே புதியவர்களை பணியமர்த்தியுள்ள டிசிஎஸ், லேட்டரல் பணியமர்த்தலையும் தொடங்கியுள்ளன. இதே நேரத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் 20,000 பேரை பணியில் அமர்த்தும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிக தேவை உள்ளது
இதே ஹெச்சிஎல் நிறுவனம் 15,000-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தும் என்றும் கூறப்படுகிறது. எனினும் நடுத்தர நிறுவனங்களில் பணியமர்த்தல் தேதிகளில் ஒத்தி வைப்பு காணலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக நிறுவனங்கள் பணியமர்த்தப்படாததால் நிறைய தேவை உள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் அவுட்சோர்சிங் பணிகள்
இந்த நிலையில் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களை போட்டு வருவதால், பெஞ்ச் ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றன. ஆக மொத்ததில் விசா தடையினால் அவுட்சோர்ஸிங் பணிகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இந்திய நிறுவனங்களுக்கும் இந்திய ஊழியர்களுக்கும் இது உண்மையில் ஒரு நல்ல வாய்ப்பாகத் தான் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications