முதலில் வரலாறு காணாத உணவு பஞ்சம். தற்போது கொரோனா.. கிம் ஜாங்-கினை விரட்டும் பிரச்சனைகள்..!

வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது? ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சை வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் அங்கு உணவு பஞ்சம் என்பது மிக மோசமாக தலை விரித்தாடியதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் கிம் ஜாங்கின் இரும்புக் கோட்டையை, கொரோனா என்னும் அரக்கன் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில் கூட, வடகொரியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்

பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்

ஆனால் தற்போது அங்கும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாகவும், இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியாக கையாளவில்லை என சில அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதரணமாகவே வட கொரியாவில் நடக்கும் விஷயங்கள் வெளியில் அவ்வளவாக தெரியாது.

கேள்விக்கு மேல் கேள்வி

கேள்விக்கு மேல் கேள்வி

இந்த நிலையில் வட கொரியாவில் தற்போதைய உண்மை நிலவரம் தான் என்ன? அங்கு தற்போது அங்கு உணவு பஞ்சம் உள்ளதா? மக்களின் நிலை என்ன? அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இப்படி பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது கொரோனாவும் சேர்ந்து கொண்டதா என்ன? இப்படி பல பதற்றங்களுக்கும் மத்தியில் கிம் தனது எடையை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதாரம் பற்றி கவலை

பொருளாதாரம் பற்றி கவலை

மேலும் தற்போது கொரோனாவினை விட, கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்லுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், அங்கு பாதுகாப்பான சுகாதார முறைகள் இருப்பதால் தடுப்பூசி எதுவும் இதுவரையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மோசமான பொருளாதார சரிவு

மோசமான பொருளாதார சரிவு

வட கொரியாவில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்று அந்த நாடு கூறி வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானிய அதிகாரிகளால் கொரோனாவினை கட்டுப்படுத்த எடுத்த கடுமையான நடவடிக்கைகளினால் தான் பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதோ? இதனால் அதன் சர்வதேச வர்த்தக பங்காளியான சீனாவின் எல்லை உட்பட மூடுதல், சர்வதேச பொருளாதார தடை என பல காரணங்களினால் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டிருக்கலாம்.

உண்மையை தெரிந்தால் உதவலாம்

உண்மையை தெரிந்தால் உதவலாம்

வட கொரியா இதனை பகிரங்கமாக தெரிவித்தால் தான் அங்கு என்ன நடக்கிறது என தெரியும். இதனால் ஐ நாவின் உலக உணவு திட்டம் மூலமாக கூடுதலாக உதவிகளை பெறலாம். அதோடு தடுப்பூசி குறித்து வட கொரியாவுக்கு தேவைப்பட்டால் ,உதவுவதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஆனாலும் கிம் எதையும் வெளியுலகத்திற்கு சொல்ல தயங்குகிறார். உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் என்ற திட்டத்தை, மே மாத இறுதிக்குள் வட கொரியா 1.7 மில்லியன் தடுப்பூசிகளை பெறவிருந்தது. ஆனால் அமைப்பின் விதிகளை பின்பற்ற விரும்பாததால், ஏற்றுமதி தாமதமானது என செய்திகள் வெளியானது.

வெளி நாட்டினர் வட கொரியாவின் மோசமான நிலையை பார்ப்பதை கிம் விரும்பவில்லை. வட கொரியாவை பொறுத்தவரையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட, கடுமையான ஆயுதம் ஏந்திய ஒரு நாடு. அதன் தலைவர் மக்களை பற்றி கவலைப்படவில்லை, கிம் வைரஸினை பற்றி கவலைப்படுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

உணவு பஞ்சம்

உணவு பஞ்சம்

சமீபத்தில் வெளியான செய்தியில் வட கொரியாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல ஆயிரம் மக்கள் பட்னியால் வாடி வருகின்றனர். உணவு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு எட்டியுள்ளன. இன்னும் சில தகவல்கள் மக்கள் ஒரு நாளைக்கு முறை மட்டுமே உணவு உண்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தான் காரணம்

இது தான் காரணம்

கொரோனாவின் காரணமாக வட கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அந்த நாட்டில் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக சீனாவில் இருந்து வடகொரியா பெரும் அளவிலான உதவிகளை பெற்று வந்த நிலையில், அவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு புயல் காரணமாக அங்கு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்கள் உற்பத்தியும் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கிம் ஜாங்கிற்கு கடும் சவால்

கிம் ஜாங்கிற்கு கடும் சவால்

ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு, இந்த மோசமான நிலையானது மேலும் கடுமையான சவாலான நிலையினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி அதிகரிப்பு வதைத்து வரும் நிலையில், தற்போது கொரோனாவும் மக்களை வாட்டி வதைத்து வருகிறதோ? என்ன இருந்தாலும் கிம் இது குறித்து அறிவிப்புகளை வெளியிடாத வரையில் முழுமையான விவரங்கள் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+