ஹூண்டாய் வருது ஓகே.. பின்னாடியே இத்தாலி நிறுவனமும் வருதே.. பணம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்..!!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஹூண்டாய் மோட்டார்ஸ், நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயர், நம்பிக்கையைப் பணமாக மாற்றும் முக்கியமான இலக்குடன் ஐபிஓ திட்டத்தை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரித்துக் குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரித்து, இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவீட்டை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளது.

ஹூண்டாய் வருது ஓகே.. பின்னாடியே இத்தாலி நிறுவனமும் வருதே.. பணம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்..!!

இந்த திட்டங்களுக்காக ஏற்கனவே சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் பெரும் தொகையை முதலீடு செய்வதாக அறிவித்தள்ளது. இந்த நிலையில் இந்தியச் சந்தையிலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் நம்பிக்கை அளிக்கும் வகையில் ரூ.25,000 கோடி மதிப்பிலான நிதியைத் திரட்டும் இலக்குடன் ஐபிஓ வெளியிட செபியிடம் DRHP அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் துறையைச் சேர்ந்த ஒரு இத்தாலிய பன்னாட்டு நிறுவனமான கராரோ குழுமம் (Carraro Group), தனது இந்தியக் கிளை நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் துவங்கியுள்ளது.

விவசாய துறை கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கராரோ குழுமம், டிராக்டர்கள் மற்றும் ஆப் ஹைய்வே வாகனங்களுக்கான கியர்பாக்ஸ் அமைப்புகளைத் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் Carraro Group தனது இந்திய பிரிவின் மதிப்பைப் பணமாக்க IPO வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஹேப்பி ஃபார்ஜிங்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்டி, 18 சதவீத பிரீமியத்தில் தனது பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது. ஹேப்பி ஃபார்ஜிங்ஸ், ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் கொடுத்த நம்பிக்கை காரணமாக தற்போது Carraro India ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளது.

கராரோ இந்தியாவின் ஐபிஓ பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஸ் கேப்பிட்டல், பி.என்.பி. பரிபாஸ் மற்றும் நுவாமா வெல்த் மேனேஜ்மெண்ட் ஆகிய மூன்று முதலீட்டு வங்கிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கராரோ இந்தியா இந்த ஐபிஓ-வில் புதிய பங்குகள் வெளியீடு (Fresh Issue) மற்றும் பங்கு விற்பனை (Offer for Sale - OFS) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், இந்த ஐபிஓ-வில் 800 முதல் 1000 கோடி ரூபாய் வரையிலான நிதியைத் திரட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கராரோ இந்தியா தனது ஐபிஓ திட்டம் குறித்தும், 1000 கோடி ரூபாய் நிதி திரட்டல் குறித்தும் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கராரோ நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது. அப்போது எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புனே அருகில் ராஞ்சன்காவோன் பகுதியில் உற்பத்தி தளத்தை அமைத்தது. 1999 ஆம் ஆண்டில், இந்த ஆலை அதிகாரப்பூர்வமாக ஆக்ஸல் மற்றும் கியர்பாக்ஸ் உற்பத்தியைத் தொடங்கி தற்போது இதே பகுதியில் 3 தொழிற்சாலைகளைக் கொண்டு உள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது பிரகாசமான வாய்ப்பு உருவாகியிருக்கும் காரணத்தால் பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை ஈர்க்க உள்ளது. இந்த சூழ்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சரியாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்தினால் கட்டாயம் பெரும் தொகையை இந்த ஐபிஓ மூலம் சம்பாதிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+