சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் விராட் கோலியின் அபார பேட்டிங் என்பதும் இதனை அடுத்து விராத் கோஹ்லிக்கு பாராட்டு குவிந்தது என்பதும் தெரிந்ததே.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதால் விராட் கோலிக்கு பாராட்டுகள் மட்டுமின்றி விளம்பரங்களும் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
உலகக்கோப்பை டி20
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி திரில்லிங்காக இருந்தது என்பதும் ஆட்டத்தின் கடைசி பந்து வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியாத வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றியை தன் கையில் வைத்திருந்த பாகிஸ்தான் கோட்டைவிட்டது என்பதும் விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தானை நிலைகுலைய செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளம்பர ஒப்பந்தங்கள்
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பின்னர் விராட் கோஹ்லியின் விளம்பர ஒப்பந்தங்கள் உயரக்கூடும் என்று விளம்பர ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு விராட் கோலியின் விளம்பர ஒப்பந்தம் மதிப்பு 237.7 மில்லியன் டாலராக இருந்தது என்றும் அது 2021 ஆம் ஆண்டு 185.7 மில்லியன் டாலராக குறைந்தது என்றும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு போட்டி
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லியின் அற்புதமான பேட்டிங் காரணமாக இந்த ஆண்டு அவரது விளம்பரம் பிராண்டுகளின் மதிப்பு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விராட் கோஹ்லியின் பேட்டிங் கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்பதால் பல பிராண்டுகள் விராட் கோஹ்லியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது. ஆனால் சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி காரணமாக தற்போது மீண்டும் அதிக பிராண்டுகள் அவரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய நிறுவனங்கள்
மேலும் புதிய ஒப்பந்தங்கள் மட்டுமின்றி ஏற்கனவே அவரை ஒப்பந்தம் செய்து இருந்த நிறுவனங்களும் தங்களது ஒப்பந்தத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி இனிவரும் காலங்களில் இதே ஃபார்ம் உடன் பேட்டிங் செய்தால் அவருக்கு அதிக பிராண்டுகள் கிடைக்குமென்று விளம்பர ஆலோசகர் ஹரிஷ் பிஜூ அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய பிராண்டுகள் அவருக்காக வரிசையாக நின்று கொண்டிருகின்றன என்றும், ஒரே ஒரு போட்டி அவரது விளம்பர ஒப்பந்தத்தை மிகப் பெரிய அளவில் மாற்றம் செய்து விட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.
குவியும் வாய்ப்புகள்
விராட் கோலியை விளம்பரத்திற்காக பயன்படுத்திய எம்ஆர்எப் நிறுவனத்திற்கு போட்டி நடந்த மறுநாள் மிகப்பெரிய வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விராட் கோஹ்லி ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட பிராண்டுக்கு ஒப்பந்தமாகி உள்ள நிலையில் மேலும் சில பிராண்டுகள் அவருக்கு குவியும் என்று கூறப்படுவது விளம்பர உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முழுத்திறன்
ஆனால் அதே நேரத்தில் விராட்கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி போலவே அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் தனது முழு திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications