இந்தியாவுடன் அமெரிக்கா ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த ஒப்பந்தம் இந்திய சந்தைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அதிக வாய்ப்புகளை வழங்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தோனேசியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தோனேசியாவின் ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 32%இல் இருந்து 19%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தோனேசியாவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசும்போது, இந்தியாவுடனும் அதேபோன்ற ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக கூறினார். மேலும் அவர் பேசுகையில், "நாம் இந்தோனேசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தோனேசியா பஞ்சு மற்றும் தாமிரத்தில் வலிமையான நாடு. ஆனால், இப்போது எங்களுக்கு எந்த தடையும் இன்றி, முழு அனுமதியும் இருக்கிறது. இதனால், இனி எந்த விதமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதுவரை இல்லாத வாய்ப்புகளை எங்களுக்கு அவர்கள் தருகிறார்கள். இதுவே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இந்தியாவும் இதேபோல் செயல்பட்டு வருகிறது" என்றார்.

அதேபோல், நாங்கள் இனி இந்திய சந்தையில் நுழையப் போகிறோம். இதுவரை எங்களுக்கு இந்த நாடுகளில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் இருந்தது. நம்முடைய தொழிலாளர்கள், நிறுவனங்கள் இங்கு செல்ல முடியவில்லை. ஆனால், இப்போது நாங்கள் வரிகளை வைத்து எடுத்து வரும் நடவடிக்கைகளால், இவ்வாறான அனுமதியை பெற முடிகிறது" என்று தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகள் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் வரி தான் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கும் சூழலில், இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உள்ள சூழ்நிலையில், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில், ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கடந்த வாரம் வெளியான ஒரு Bloomberg செய்தி அறிக்கையில், டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் சில தளர்வுகளை பரிசீலித்து வருவதாகவும், ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 26% வரியை, 20%ஆக குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பரஸ்பர வரிகள் (reciprocal tariffs) அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் முதல், அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வரி தொடர்பான கடிதங்களை அனுப்பி வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வகை வரி கடிதங்களை பெற்றுள்ளன. இந்தியாவுக்கு மட்டும் தற்போது வரை எந்தவொரு கடிதமும் வரவில்லை என கூறப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதும், அதில் முன்னேற்றம் காணப்படுவதும் ஆக இருக்கலாம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications