இந்தியாவில் கடந்த 3 வருடத்தில் கொரோனா தொற்றாலும், பொருளாதாரப் பாதிப்பாலும் சரிவை காணாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பது ஐடி துறை என்றால் மிகையில்லை.
இப்படிப்பட்ட ஐடி துறை ரஷ்ய - உக்ரைன் போர் துவங்கிய பின்பு நேரடியாகப் பாதிப்படையாமல் மறைமுகமாகப் பல வகையில் பாதிப்படைந்து வருகிறது.
இந்தப் பாதிப்பின் உச்சம் என்னவென்றால் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை மட்டும் அல்லாமல் பட்டப்படிப்பு முடித்துப் புதிதாகப் பணியில் சேர உள்ள பிரஷ்ஷர்களுக்குப் பணி நியமன ஆணை கொடுத்துவிட்டு அழைக்க முடியாமல் நிற்கிறது.
எதனால் இந்தப் பிரச்சனை..? ஏன் ஐடி நிறுவனங்களுக்குப் பணி நியமன லெட்டர் கொடுத்தும் திரும்ப அழைக்க முடியவில்லை..? இந்திய ஐடி நிறுவனங்களுக்கு என்ன ஆனது..?
ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச அளவில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாகப் புதிய திட்டங்கள் கிடைப்பதிலும், ஏற்கனவே பெற்ற திட்டங்களில் போதுமான பண லாப அளவுகள் கிடைக்காத காரணத்தாலும் மார்ஜின் பிரச்சனைகளைக் கடந்த காலாண்டு முதலே நடந்து வருகிறது.
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா
இந்த நிலையில் செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், புதிய ஊழியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவும், பல்வேறு காரணங்களைக் கூறி விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகியவை சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான பணியை ரத்து செய்துள்ளது. இதனால் பல பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர்.
அக்சென்சர் நிறுவனம்
இந்த நிலையில் தற்போது விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா பட்டியலில் அக்சென்சர் நிறுவனமும் சேர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பிஸ்னஸ்டுடே-வுக்குப் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஒருவர் அக்சென்சர் நிறுவனத்தில் Associate Software Engineer (ASE) பணிக்கு அக்டோபர் 2021ஆம் தேதி கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் தேர்வானேன்.
ஆஃபர் லெட்டர்
ஏப்ரல் மாதம் வேலை பெற்றதற்கான ஆஃபர் லெட்டர் வந்தது, ஆனால் அக்சென்சர் ஆன்போர்டிங் செய்யாமலேயே பல மாதம் ஒத்திவைத்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி அக்சென்சர் அனுப்பிய கடிதத்தில் 2023 வரையில் ஒத்தி வைத்துள்ளது. தற்போது அக்சென்சர் மற்றும் கல்லூரி நிர்வாகம் எவ்விதமான பொறுப்பு ஏற்க மறுக்கிறது எனப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐடி ஊழியர்கள்
பல நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பெற்ற ஆஃபர் லெட்டருக்கும் பதில் கிடைக்காமல் பல ஐடி ஊழியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, அக்சென்சர் நிறுவனத்தில் சேருவதற்காகப் பழைய நிறுவனத்தில் பணியை விட்ட பலருக்குத் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் நிற்கின்றனர் என்பது கொடுமையிலும் கொடுமை.
கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட்
இந்திய ஐடி நிறுவனங்களில் மட்டும் தான் இப்படிப்பட்ட மோசமான நிலை இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், போன்ற பல நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது, அதேபோல் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் ஊழியர்களின் பணியிடம் மறு சீரமைப்பு செய்யவும், சிலரை பணிநீக்கம் செய்தும் வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications