இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான எச்சிஎல் டெக், தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் பல லட்சம் ஐடி ஊழியர்கள் பல மாதங்களாக இந்த ஒரு விஷயத்திற்காக காத்திருக்கும் வேளையில், இன்போசிஸ் 4ஆம் காலாண்டுக்கு ஒத்திவைத்துள்ளதாக கூறப்படும் வேளையில் ஹெச்சிஎல் திட்டமிட்டப்படி சம்பள உயர்வை கொடுத்துள்ளது. ஆனால் ஒரு சிக்கல்.
ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் சம்பள உயர்வு அளிக்கும் நடவடிக்கையின் முதல் கட்டத்தில் ஜூனியர் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், E0, E1 மற்றும் E2 பேண்டுகளில் உள்ள ஊழியர்கள், முக்கியமாக 10 ஆண்டுகள் வரை அனுபவமுள்ள ஜூனியர் ஊழியர்களுக்கு 1-2% வரை மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், டாப் பர்பாமெர்ஸ்-களுக்கு 3-4% வரை சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாக இந்நிறுவன ஊழியர்கள் மனிகண்ட்ரோல் தளத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் முந்தைய காலாண்டு முடிவின் போது சராசரியாக 7 சதவீத சம்பள உயர்வும், டாப் பர்பாமெர்-களுக்கு 12-15% வரையில் சம்பள உயர்வை அளிப்பதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அளிக்கப்பட்டு உள்ள சம்பள உயர்வை பார்க்கும் போது ஐடி ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
E3 பேண்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்கள், அதாவது நடுத்தர முதல் மூத்த நிலை அதிகாரிகள், இன்னும் சம்பள உயர்வுகளைப் பெறவில்லை. இந்த பேண்டுகளில் உள்ள சில ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சம்பள உயர்வும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான சம்பள உயர்வை இதுவரையில் டாடா கண்சல்டன்சி சர்வீஸ் மட்டுமே தனது ஊழியர்களுக்கு அளித்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் குறைவான சம்பள உயர்வையோ அல்லது சம்பள உயர்வை ஒத்திவைக்கும் முடிவையோ எடுத்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களுக்கும் ஊழியர்களின் சம்பள உயர்வு என்பது பெரும் நிதி சுமையாகவே உள்ளது. இந்த வேளையில் புதிய வர்த்தகம் பெற முடியாமல் போனாலோ, லாபம் குறைந்தாலோ முதலில் கைவைக்கப்படுவது ஊழியர்களின் சம்பள உயர்வும், வேரியபிள் பே தொகையும் தான்.


Click it and Unblock the Notifications