கோப்பை வென்ற கையோடு விற்பனைக்கு வந்த RCB.. வீரர்களின் நிலை என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கடந்த 17 வருடங்களாக காத்திருந்து, தங்கள் முதல் கோப்பையை வென்ற உற்சாகம் அடங்குவதற்குள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு அதன் உரிமையாளர் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆம், அணியின் தாய் நிறுவனமான டியாஜியோ (Diageo), ஆர்சிபி அணியை விற்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஆண்களுக்கான ஐபிஎல் மற்றும் பெண்களுக்கான WPL ஆகிய இரண்டு அணிகளையும் உள்ளடக்கிய மொத்த நிறுவனத்தையும் விற்க முடிவெடுத்துள்ளதாக, இந்த வெளிநாட்டு மதுபான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை வேலைகளை மார்ச் 31, 2026-க்குள் முடித்துவிட டியாஜியோ திட்டமிட்டுள்ளது.

கோப்பை வென்ற கையோடு விற்பனைக்கு வந்த RCB.. வீரர்களின் நிலை என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஏன் இந்த அவசர முடிவு..?: கோப்பையை வென்ற மகிழ்ச்சி நீங்குவதற்குள் டியாஜியோ ஏன் விற்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, டியாஜியோ நிறுவனம் தங்கள் முக்கிய தொழிலான மதுபான உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் அணி போன்ற மற்ற துறைகளில் இருந்து விலகிவிட அது விரும்புகிறது.

இரண்டாவது காரணம் மிகவும் முக்கியமானது. ஆர்சிபி கோப்பையை வென்றபோது, சின்னசாமி மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக சில ரசிகர்கள் காயமடைந்தனர். இது, நிறுவனத்தின் பெயர் கெடுவதற்கும், சட்டரீதியான சிக்கல்கள் வருவதற்கும் வழிவகுக்கும் என்று டியாஜியோ கவலைப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதுபான நிறுவனங்கள் விளையாட்டுத் துறையில் முதலீடு செய்வது குறித்த சட்டரீதியான கேள்விகள் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் விற்பனை முடிவை உறுதி செய்துள்ளது.

வீரர்களின் நிலை என்ன..?:ஆர்சிபி அணிக்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் (Retention) முக்கியமான நேரம் இது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் மற்றும் WPL ஏலத்திற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் விற்பனை அறிவிப்பு வந்தாலும், வீரர்கள் கவலைப்பட தேவையில்லை. அணியை வாங்கும் புதிய உரிமையாளர்கள் வரும்வரை, தற்போதைய நிர்வாகமே அனைத்து வேலைகளையும் பார்க்கும் என்று டியாஜியோ உறுதியளித்துள்ளது. வீரர்களின் செயல்பாடோ, அணியைத் தேர்ந்தெடுக்கும் முடிவுகளோ பாதிக்கப்படாது என்றும், சுமூகமான முறையில் அணியை ஒப்படைக்க விரும்புவதாகவும் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பு குறையவில்லை : அணியின் உரிமையாளர் மாறினாலும், ஆர்சிபி-யின் மதிப்பு மட்டும் குறையவில்லை. உலகளாவிய மதிப்பீட்டின்படி, ஆர்சிபி-யின் பிராண்ட் மதிப்பு 269 மில்லியன் டாலர் ஆகும். இது ஐபிஎல்-லில் அதிக மதிப்புள்ள டாப் 3 அணிகளில் ஒன்றாகும். இதற்கு முக்கியக் காரணம், விராட் கோலி போன்ற உலகப் பிரபலங்கள் அணியில் இருப்பது மற்றும் ஆர்சிபி-க்கு இருக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம்தான். அதனால், இந்த அணியை வாங்கப் பல பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ-க்கும் (BCCI) ஐபிஎல் குழுவுக்கும் விற்பனை தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்த சில மாதங்களில் புதிய உரிமையாளர் யார் என்பது தெரியவரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+