சென்னை: பொதுவாக அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் ஐடி துறையில் பணியாற்றும் காரணத்தால், அமெரிக்காவின் டெக் துறை மொத்தமும் இந்தியர்களை நம்பியிருக்கிறது என்ற கருத்து உண்டு. தற்போது ஐடி துறையுடன் மற்றொரு துறையும் இணைந்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்களில் இந்தியர்களே முதலிடத்திலும், செவிலியர்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்று ரெமிட்லி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் அமெரிக்க மருத்து துறையிலும் இந்தியர்கள் ஆட்சி செய்யத் துவங்கியுள்ளனர்.

இந்த வேளையில் மொத்த ஹெல்த்கேர் பணியாளர்கள் மற்றும் உதவி செவிலியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஹெல்த்கேர் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்ஸிகோ நாட்டினர் தான் முதல் 2 இடத்தில் உள்ளனர், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 9.87 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர், இதில் கிட்டத்தட்ட 26.5% அல்லது 2.62 லட்சம் பேர் வெளிநாட்டு மருத்துவர்கள். இதில், இந்திய மருத்துவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
மருத்துவர்களாக பணிபுரிவதற்காக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டை காட்டிலும் அதிகமாக உள்ளது நம்நாட்டிற்குத் தனிப்பெருமை. இந்திய மருத்துவர்கள் நியூஜெர்சி, ஃப்ளோரிடா மற்றும் நியூயார்க் மாநிலங்கள் அதிகமாக உள்ளனர்.
ரெமிட்லி நிறுவனத்தின் Immigrant Healthcare Index அறிக்கையை மைக்ரேஷன் பாலிசி இன்ஸ்டிடியூட் (MPI) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் பீரோ ஆஃப் லேபர் ஸ்டேடிஸ்டிக்ஸ் (US Bureau of Labor Statistics) ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 34.17 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களில் 16% பேர் வெளிநாட்டினர். இதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் செவிலியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்காவில் உள்ள 1.41 லட்சம் வெளிநாட்டுச் செவிலியர்களில் 26% பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர். இந்தியாவைச் சேர்ந்த 32,000 செவிலியர்கள் (6%) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 24,000 செவிலியர்கள் (5%) அவர்களைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
இப்படி வெளிநாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் செவிலியர்களாக பணியாற்றுவோர் கலிபோர்னியா, நெவாடா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் அதிகமாக பணியாற்றுகின்றனர்.
அமெரிக்காவின் மொத்த சுகாதார பணியாளர்களில் 18% பேர் வெளிநாட்டவர்கள் தான். இவர்களின் எண்ணிக்கை சுமார் 2.7 கோடி ஆகும். இந்த வெளிநாட்டு சுகாதார பணியாளர்களில் 1.76 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இது மொத்த வெளிநாட்டுச் சுகாதார பணியாளர்களில் 7 சதவீதம் ஆகும்.
மருத்துவர்களில் முதலிடம் வகிப்பவர்களாகவும், செவிலியர்களில் இரண்டாவது இடத்திலும் இருந்தாலும், மொத்த வெளிநாட்டு சுகாதார பணியாளர்களில் இந்தியா மூன்றாவது இடத்திலேயே உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications