உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ம் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.
27 வருட திருமண வாழ்க்கை
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது பிரிவு குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பல ஆலோசனைகள் மத்தியில் எங்களது 27 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். உலகம் முழுவதும் இயங்கும் மாபெரும் Bill & Melinda Gates Foundation இருவரும் இணைந்து உருவாக்கியதன் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வாழ்க்கையில் பயணம்
Bill & Melinda Gates Foundationல் தொடர்ந்து இருவரும் பணியாற்றுவோம், ஆனால் ஜோடிகளாக அல்ல. எங்களது தனிநபர் வாழ்க்கைக்கு இடைவேளையைக் கோரி புதிய வாழ்க்கையில் பயணிக்கத் திட்டமிட்டு உள்ளோம் என அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ்.
அமேசான் ஜெஃப் பெசோஸ்
சில வருடங்களுக்கு முன்பு உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது காதல் மனைவியான மெக்கென்சி பெசோஸ்-ஐ விவாகரத்துச் செய்தார். இவர்களின் விவாகரத்து தான் உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக உள்ளது.
36 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்
ஜெஃப் பெசோஸ் உருவாக்கிய அமேசான் சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்பக்கட்டத்தில் அவரது முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட்-க்கு (விவாகரத்துக்குப் பின் பெயர் மாற்றிக்கொண்டார்.) பெரும் பங்கு இருந்த காரணத்தால் ஜீவனாம்சமாகச் சுமார் 4 சதவீத அமேசான் பங்குகள் அளிக்கப்பட்டது.
பில் கேட்ஸ் ஜீவனாம்சம்
இதேபோல் தற்போது 130 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய பில் கேட்ஸ் அவரது 27 வருடக் காதல் மனைவியும், முன்னாள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜருமான மெலிண்டா கேட்ஸ்-ஐ விவாகரத்துச் செய்வது மூலம் எவ்வளவு தொகை ஜீவனாம்சமாகக் கொடுப்பார் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications