இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாக பெங்களூரு இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டு வாடகைகளில் மதிப்பும் பல மடங்கு உயர்வு கண்டது.
வீட்டு வாடகை அநியாயத்துக்கு இருக்கிறது என வாடகைதாரர்கள் புலம்பி வந்தனர். இந்த சூழலில் பெங்களூருவில் வீட்டு வாடகைகள் தற்போது குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த பெங்களூர் வீட்டு வாடகை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது என அங்கே வாடகைக்கு வசிக்கக்கூடிய நபர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரெடிட் மற்றும் பேஸ்புக் தளங்களில் வெளியாகும் பதிவுகளில் பெங்களூரில் பிரதான பகுதிகளிலேயே முன்பு இருந்ததை விட தற்போது 15 சதவீதம் வரை வீடுகளின் வாடகை குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பெங்களூருவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பது மற்றும் ஐ டி துறை சார்ந்த வேலைகள் பணி பாதுகாப்பை தராமல் இருப்பது காரணமாக அதிக வாடகை கொடுத்து வீட்டினை எடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் பெங்களூரில் சொந்தமாக வீடு வாங்குவதற்கும் பலரும் விரும்புவதில்லை.
பெங்களூருவில் தற்போது அதிக அளவில் வீடுகள் கட்டப்பட்டு அவை விற்பனை செய்யப்படாமலும் யாராலும் வாடகைக்கு எடுக்கப்படாமல் இருப்பது அதிகரித்திருக்கிறதாம். நிறுவனங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்திருந்தாலும் பணி நீக்க நடவடிக்கைகள் , ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக வாடகைக்கு வீடு எடுப்பது , சொந்தமாக வீடு வாங்குவதை பலரும் தவிக்கின்றனர்.
இது பெங்களூர் ரியல் எஸ்டேட் சந்தையிலும் வீட்டு வாடகை சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது . புதிதாக வீடு வாடகைக்கு தேடி செல்லும் இடங்களில் 15% வரை வாடகைக்கு குறைத்து கேட்பதாகவும் பல இடங்களில் உரிமையாளர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர் . ரெடிட் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பதிவில் கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரில் வீட்டு வாடகை மதிப்புகளை நான் கவனித்து வருகிறேன் தற்போது இரண்டு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை கணிசமான அளவு குறைந்து இருக்கிறது என ஒரு நபர் தெரிவித்திருக்கிறார்.
உரிமையாளர்கள் தங்களுக்கு பொருத்தமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட வாடகைதாரர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதால் தாங்களாகவே முன்வந்து வாடகையை குறைக்கின்றனர் என கூறியிருக்கிறார். ஒரு பயனர் இத்தனை ஆண்டுகளாக என்னுடைய வீட்டு உரிமையாளர் ஆண்டுதோறும் 15 % வரை வாடகை உயர்த்தி வந்தார் இந்த ஆண்டு அவர் வாடகையே உயர்த்தவில்லை என கூறியிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு பெங்களூருவில் கோரமங்கலா, சர்ஜாபூர், ஒயிட்ஃபீல்டு பகுதிகளில் வீட்டு வாடகை மதிப்பு ஆண்டுதோறும் 30 லிருந்து 35% அதிகரிக்க நிலையில் தற்போது அவை 5 % என குறைந்திருப்பதாக புரோக்கர் இன் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான மஞ்சேஸ்வரர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 35 முதல் 40 ஆயிரம் வரை மாத வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது தற்போது 30,000 வரை குறைந்து இருக்கிறது என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications