இந்தியாவில் கொரோனா பாதிப்புக் காரணமாகப் போடப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு மே மாதம் முதல் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையில் சிறப்பான வளர்ச்சி அடைந்த வரு காரணத்தால் வேலைவாய்ப்புப் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்தது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் முதல் முறையாக மே மாதத்திற்குப் பின் குறைந்துள்ளது. இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் அனைத்து துறைகளும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுக் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் நிலையில். முதலீட்டுச் சந்தையைப் பாதிக்கும் வகையில்ல வேலைவாய்ப்புகள் அளவீடுகள் பாதித்துள்ளது.
இந்திய வேலைவாய்ப்பு சந்தை
லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்ட மே மாதத்திற்குப் பின் இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வெறும் 4 மாத காலகட்டத்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
இதன் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மே மாத்திற்குப் பின் முதல் முறையாக அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு அளவீட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.
5.5 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 5.5 லட்சம் சரிந்து இம்மாத வேலைவாய்ப்பு அளவீடு 37.8 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 38 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் சரிவு
பண்டிகை காலம் என்பதால் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வேலைவாய்ப்புச் செய்யத் தயாராக 1.2 கோடி பேர் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் மாதம் 5.5 லட்ச வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளது.
இது தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டு இறுதியில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1 சதவீதம் வரையில் சரியும் எனக் கணக்கிடப்படுகிறது.
அமெரிக்கா பிரிட்டன்
கொரோனா தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தொற்று எண்ணிக்கை 1 கோடியை அடையும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல் வியாழக்கிழமை பிரிட்டன் அரசு கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் முழுமையான லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2 வரையில் உணவகங்கள், பார் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை சேவைகள் கிடைப்பதிலும் பாதிப்பும் ஏற்படும்.
வேலைவாய்ப்பு சந்தை
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கொரோனாவால் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலை இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவால் தடுமாறிக்கொண்டு இருக்கும் வேளையில் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்திய மக்களின் முக்கியமான பண்டிகை என்பதால் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உள்ள நிலையில் பல மாநிலங்கள் பட்டாசு மற்றும் விழா கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம்
இக்காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் வேலைவாய்ப்பு சந்தை மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications