ஆர்பிஐ சொன்னது இருக்கட்டும்.. எஸ்பிஐ சொன்னதை கேட்டீங்களா..?!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), நடப்பு நிதியாண்டு 2024-25 க்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.3% ஆக குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிடும் போது நாட்டின் வளர்ச்சி கணிப்பை 7.2% இலிருந்து 6.6% ஆக குறைத்ததைத் தொடர்ந்து தற்போது எஸ்பிஐ தனது புதிய கணிப்பை வெளியிட்டு உள்ளது.

SBI-யின் திருத்தப்பட்ட கணிப்பு, குறிப்பாக நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட சமீபத்திய வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையில் மாற்றம் நடந்திருப்பத்தை காட்டுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கான சராசரி GDP வளர்ச்சி விகிதம் 6.05% ஆக பதிவாகியுள்ளது.

ஆர்பிஐ சொன்னது இருக்கட்டும்.. எஸ்பிஐ சொன்னதை கேட்டீங்களா..?!

இந்த பொருளாதார கணிப்புகள் முதலீட்டு சந்தையை நேரடியாக பாதிக்கும், குறிப்பாக பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்த தரவுகளை முக்கியமானதாக பார்க்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் GDP கணிப்பை குறைத்ததற்கு முக்கியமான காரணம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இதேவேளையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டதை விட பலவீனமான உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான பணவீக்க பாதிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி கணிப்பை பாதித்துள்ளது என நாணய கொள்கை கூட்டத்தில் விளக்கம் கொடுத்தார்.

2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 5.4% ஆக குறைந்து, ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி தனது பணவீக்க கணிப்பை 4.8% ஆக உயர்த்தியுள்ளது, நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க முக்கியமான காரணம் உணவு விலைகளில் ஏற்பட்டு உள்ளது உயர்வு தான்.

இந்த அனைத்து வளர்ச்சிகளும் இந்தியா தற்போது கடந்து வரும் சிக்கலான பொருளாதார நிலையை எடுத்துக்காட்டுகின்றன. பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் இருந்தாலும், பணவீக்கம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலை போன்ற சவால்கள் வளர்ச்சி கண்ணோட்டத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ரிசர்வ் வங்கியின் பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்: 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6% ஆகவும், 3வது காலாண்டு 6.8%, 4வது காலாண்டு 7.2% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

2024-25 நிதிய ஆண்டிற்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 4.8% ஆகவும், 3வது காலாண்டு 5.7%, 4வது காலாண்டு 4.5% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+