ஜியோ ஐபிஓ வேலை முடிந்தது. அமெரிக்க கிளம்பிய முகேஷ் அம்பானி டீம்.. அடுத்த பிரம்மாண்டம் ரெடி..!!

இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ மூலம் பெரும் வருமானம் ஈட்டியிருக்கும் வேளையில், உடனடியாக அடுத்தகட்ட வளர்ச்சி திட்டத்தில் இறங்கியுள்ளார். ஜியோ என்றால் எல்லோருக்கும் வெறும் டெலிகாம் நிறுவனமாகத் தான் தெரியும், ஆனால் உண்மையில் ஜியோ ஒரு டெக்லானஜி நிறுவனமாகும்.

ஜியோ நிறுவனத்தின் டெக்னாலஜி வைத்து அடித்தக்கட்ட வளர்ச்சிக்கு அடித்தளம் போட முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இதற்காக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளார்.

ஜியோ ஐபிஓ வேலை முடிந்தது. அமெரிக்க கிளம்பிய முகேஷ் அம்பானி டீம்.. அடுத்த பிரம்மாண்டம் ரெடி..!!

அதாவது ஜியோ நிறுவனம் உருவாக்கியுள்ள வயர்லெஸ் பிராண்ட்பேன்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான லைசென்ஸ் கொடுக்க உள்ளதாகவும், இதற்குப் பதிலாகப் பங்குகளைப் பெற்றும் திட்டத்துடன் முகேஷ் அம்பானி தற்போது காம்காஸ்ட் மற்றும் சார்டர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் முகேஷ் அம்பானி.

இதற்கு முன்பு ஜியோ நிறுவனம் தென்னாப்பிரிக்காவின் MTN குரூப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் மதிப்பீடு மற்றும் லைசென்ஸ் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Also Read

ஜியோ தனது ஐபிஓ வெளியிடும் திட்டத்தை அறிவித்த போதே உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. இதை தற்போது சொந்தமாக உருவாக்கிய பிராண்ட்பேன்ட் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுத்த உள்ளது.

மேலும் ரிலையன்ஸ் இந்த தொழில்நுட்பம் உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. unlicensed band radio (UBR) அதாவது உலகம் முழுவதும் டேட்டா பரிமாற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள ஸ்பெக்ட்ரம் வாயிலாக டிரான்ஸ்மிட்டர் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்க முடியும்.

இந்த UBR ஸ்பெக்ட்ரத்தில் சேவை அளிக்கு எவ்விதமான அரசு ஒப்புதலும் தேவைப்படாத காரணத்தால், இதை பயன்படுத்தி வீடுகளுக்கு ஹோம் பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது ஜியோ.

அமெரிக்காவில் வயர்லெஸ் மற்றும் பைபர் நெட்வொர்க் காரணமாக வேகமாக ஹோம் பிராண்ட்பேன்ட் சேவையை இழந்து வரும் காம்காஸ்ட், சார்டப் நிறுவனங்களுக்கு ஜியோ-வின் புதிய ஹோம் பிராண்ட்பேன்ட் தொழில்நுட்பம் பெரியளவில் உதவும்.

ஜியோ தொழில்நுட்பத்தின் மூலம் கேபிள் நெட்வொர்க், மொபைல் சேவையைக் காட்டிலும் குறைவான செலவில் அதிகளவிலான ஹோம் பிராண்ட்பேன்ட் சேவை அளிக்க முடியும் என ஜியோ தெரிவிக்கும் வேளையில், உலகளவில் 10-15 பார்ட்னர்கள் கொண்டு தனது தொழில்நுட்பத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல திட்டம் போட்டு வரும் ஜியோவுக்கு முதல் டார்கெட் ஆக இருப்பது அமெரிக்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+