அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் அதுநாள் வரையில் பெரிய அளவில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது உண்மையான முகம் வெளிவர துவங்கியுள்ளது. அமெரிக்கா சீனா மீது விதித்து வந்த தொடர் வர்த்தகக் கட்டுப்பாடுகளின் காரணமாகச் சீனாவிற்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் நடப்பு பாராட்டும் நாடுகளுக்கும் சிக்கலாகவே இருக்கிறது.
இதன் எதிரொலியாக அமெரிக்காவுடன் நடப்பு பாராட்டும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது 30 வருட தொழிற்சாலையை முழுமையாகக் கைவிட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மயான அமைதியில் உள்ளது.
சீனா
சீனாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் Huizhou என்னும் நகரத்தில் சாம்சங் நிறுவனத்திற்குச் சொந்தமாக ஒரு தொழிற்சாலை சுமார் 30 வருடமாக இயங்கி வந்தது. பல ஆயிரம் பேர் பணியாற்றிய இந்தத் தொழிற்சாலை தற்போது முழுவதுமாக மூடப்பட்டு உள்ளது.
இதனால் இந்த நகரமே சோகத்தில் மயான அமைதியுடன் காட்சி அளிக்கிறது.
மயான அமைதி
இப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தும் சாம்சங் ஊழியர்களை மட்டுமே நம்பியிருந்த நிலையில் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. மக்களின் கூட்டமும், மக்கள் செலவு செய்யும் அளவும் 80 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இத்தொழிற்சாலையை நம்பியிருந்த 100 சிறு தொழிற்சாலை மற்றும் சேவை நிறுவனங்களும் தற்போது மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் விலையும் 30 சதவீதம் வரையில் சரிந்து மக்களின் அடிப்படை வாழ்வைப் புரட்டிப்போட்டு உள்ளது.
இந்தியா
சாம்சங் தனது Huizhou தொழிற்சாலையை மூடிவிட்டுத் தற்போது மொத்த உற்பத்தி தளத்தையும் இந்தியாவிலும் வியட்நாம் நாடுகளிலும் அமைத்துத் தயாரிப்பு மற்றும் உற்பத்தி பணிகளைச் செய்து வருகிறது.
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரின் எதிரொலியாகச் சந்தித்துள்ள முதலும் பெரிய பாதிப்பு இதுதான் எனத் தெரிகிறது. இந்தத் தொழிற்சாலையில் சாம்சங் தனது ஸ்மார்ட்போன் Assemble செய்தும் முக்கியமான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்தும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பாதிப்பு
இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறும் நிலையில் உருவாகும் இதனால் சீனாவின் உற்பத்தி பொருட்களின் அளவும், ஏற்றுமதி அளவும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இது இரண்டும் நடந்தால் சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இந்தியா
கடந்த வருடம் சாம்சங் உலகிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலையை நொய்டாவில் திறந்தது. இப்புது தொழிற்சாலை சாம்சங் நிறுவனத்தின் மொபைல் தயாரிப்பு எண்ணிக்கையை இரட்டிப்புச் செய்ய முடியும். தற்போது இருக்கும் 68 மில்லியன் ஸ்மார்ட்போன் தயாரிப்பு எண்ணிக்கை 120 மில்லியனாக உயர்த்த முடியும் அதுவும் அடுத்த 1 வருடத்திற்கும் இதைச் செய்ய முடியும் என்பது முக்கியமான விஷயம்.
சீனாவில் இருந்து வெளியேறிய தொழிற்சாலை இந்தியாவிற்குச் சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications