புனே: அமெரிக்க பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு என பல்வேறு காரணிகளும் ஐடி துறையை மந்த நிலையிலேயே வைத்திருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் திடீரென தங்கள் ஊழியர்களில் 12000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியாவில் ஐடி சேவையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நிறுவனமே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதால் மற்ற ஐடி நிறுவனங்களும் இதையே பின் தொடரும் என ஐடி துறையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை ஒரு காலாண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

புனே தலைமையிடமாக கொண்டு செயல்பட கூடிய ஐடி சேவை நிறுவனம் தான் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஒரு காலாண்டுக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்திருக்கிறது, இது மட்டும் இன்றி தங்கள் நிறுவனத்தில் ஃபிரஷர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறது. பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 2026 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன .
நிறுவனத்தின் வருமானம் 389.7 மில்லியன் டாலராக இருக்கிறது இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 3.9 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்த நிறுவனம் பிரதானமாக வங்கி , நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஐடி சேவைகளை வழங்குவதே வருமானம் உயர்ந்திருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது .

அதே வேளையில் இந்த நிறுவனத்தின் சுகாதார மற்றும் லைஃப் சயின்ஸ் பிரிவில் வருமானம் என்பது 1.9% குறைந்துள்ளது. இந்த துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருப்பவை இந்த நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடிக்காக செய்யக்கூடிய செலவுகளை குறைத்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதனிடையே உலக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதாக பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் கல்ரா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் மேக்ரோ பொருளாதார சூழல்களை தங்கள் நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கையுடன் சில நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை காரணமாக தங்களுடைய கிளைண்டுகள் புதிய ப்ராஜெக்ட் கையில் எடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர், இதனால் தங்களுக்கு புது ப்ராஜெக்டுகள் கிடைப்பது தாமதமாவதாக தெரிவித்துள்ள அவர் இந்த சூழலில் அடுத்து இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் சரியாகி விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications