பெங்களூர்: ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிதாக இரண்டு வழித்தடங்களை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதனால் தெற்கு பெங்களூர் பகுதியில் குடியிருப்புகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 15,611 கோடி ரூபாய் ஆகும். பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடமானது ஜே பி நகரில் இருந்து கெம்பபுரா வரை செல்கிறது. மொத்தம் 21 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதில் இடம்பெற இருக்கின்றன. இரண்டாவது ரயில் பாதை கோசா அல்லி முதல் கடாபகேரா வரை அமைகிறது. இதில் 9 ரயில் நிலையங்கள் இடம் பெற உள்ளன.

தற்போது ஒப்புதல் கிடைத்து இருக்கக்கூடிய மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்த வரை பெங்களூரின் தெற்கு பகுதிகளை அவுட்டர் ரிங் சாலை பகுதியுடன் இணைக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் பெங்களூர் நகரின் தெற்கு பகுதிகளில் குடியிருப்புகளின் மதிப்பு 10 முதல் 20% வரை உயரக்கூடும் என ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் வழித்தடம் என்பது 32.15 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் இது அவுட்டர் ரிங் சாலையில் மேற்கில் இருந்து அதாவது ஜே பி நகர் முதல் கெம்பபுரா வரையிலும் இரண்டாவது வழித்தடம் மகாடி சாலையிலிருந்து கொச அல்லி முதல் கடாபகேரா வரையிலும் அமைக்கப்பட உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் மொத்தம் 44.65 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டப்பணி 2029 ஆம் நிதி ஆண்டுக்குள் முடிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது பெங்களூரின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்கள் எளிதாக டெக் பார்க்குகளுக்கு செல்வதற்கு உதவும் வகையில் அமையும் என சொல்லப்படுகிறது. அதாவது போக்குவரத்து இணைப்பு எளிதாகி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பெங்களூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த புதிய மெட்ரோ வழித்தடம் பெங்களூரின் தெற்கு பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்புகளை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
குறிப்பாக கனகபுரா சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, பனார கட்டா சாலை, ஜே பி நகர், பி டி எம் லே-அவுட் ஆகிய பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ரியல் எஸ்டேட் மதிப்பு 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்பது தான் ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கணிப்பு.
தெற்கு பெங்களூரில் தான் வீட்டு வாடகைகள் ஏற்றம், வீடுகளின் மதிப்பு உயர்வது ஆகியவை ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால் மெட்ரோ அறிவிப்பை தொடர்ந்து இந்த பகுதிகளில் வீட்டு வாடகை மேலும் அதிகரிக்க கூடும் என சொல்லப்படுகிறது.
பெங்களூர் தெற்கு பகுதியை பொருத்தவரை இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை 70 லட்சம் ரூபாய் வரையில் இருப்பதாகவும் அதுவே வடக்கு மற்றும் கிழக்கு பெங்களூரில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாகவும் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மெட்ரோ பணிகள் நடைபெற தொடங்கி விட்டால் தெற்கு பகுதியிலும் விலை உயரும்.
இதனிடையே மெட்ரோ அறிவிப்பு வெளியானதில் இருந்து தெற்கு பெங்களூரில் வீடுகளின் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications