புனே: அண்மையில் இந்திய பங்குச் சந்தையில் பிஎன் காட்கில் ஜுவல்லர்ஸ் லிமிடெட் (PN Gadgil Jewellers Ltd ) என்ற நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்தது. ஐபிஓ விண்ணப்பம் வெளியான போதே இந்த நிறுவனத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
ஏராளமானவர்கள் இந்த ஐபிஓவிற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்று இதன் ஒரு பங்கு மதிப்பு 61% என்ற அளவில் வளர்ச்சியை கண்டது. இதன் காரணமாக பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான சவுரவ் காட்கிலின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது.

பிஎன் காட்கில் ஜுவல்லர்ஸ் என்பது இந்தியாவை சேர்ந்த 192 ஆண்டு பழமையான ஒரு நகை விற்பனை நிறுவனம் ஆகும். இதன் தலைவராக தற்போது சௌரப் காட்கில் செயல்பட்டு வருகிறார். 47 வயதாகக் கூடிய இவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்தவர். இவரது குடும்பம் பாரம்பரியமாகவே நகை தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறது. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தின் நகை தொழிலில் கால் பதித்தார்.
2012 ஆம் ஆண்டில் இவர் பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்தார். இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 1100 கோடி ரூபாயை இவர் நிதியாக திரட்டினார். முதல் கட்டமாக தங்களுடைய நகைக்கடையை மகாராஷ்டிராவில் நம்பர் ஒன் நிறுவனமாகவும் பின்னர் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரிய அளவில் தங்களுடைய கிளைகளை திறப்பது என இவர் திட்டமிட்டுள்ளார்.
டாடாவின் தனிஷ்க் உள்ளிட்ட தேசிய அளவிலான பிராண்டுகளுடன் பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய நோக்கம் என இவர் கூறுகிறார். இவரது நிறுவனம் தற்போது மகாராஷ்டிராவில் 48 கிளைகளைக் கொண்டு நகைகளை விற்பனை செய்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், ரவீனா டான்டன், சல்மான் கான் உள்ளிட்டோர் இவரது நகைக்கடையின் விளம்பர தூதுவர்களாக இருக்கின்றனர்.
1832 ஆம் ஆண்டு கணேஷ் நாராயண காட்கில் என்பவரால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டது தான் இந்த பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்த நகை தொழில் கை மாறி வந்தது. 1958 ஆம் ஆண்டு ஆனந்த் காட்கில் இதனை புனேவுக்கு மாற்றினார்.
தற்பொழுது அவரது பேரன் சௌரப் காட்கில் இதனை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு கணக்குப்படி நகை தொழில்கள் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ளவையாக இருக்கின்றன. இது 2028 ஆம் ஆண்டில் 140 பில்லியன் என்ற அளவை எட்டும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications