இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்வு கடந்த சில நாட்களாக பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் பருவ மழை அடுத்தடுத்து பெய்தாலும் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை, இதோடு பல அணைகள் வறண்டு போனதோடு, நீர் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரும் போதே அதிகப்படியான விலைக்கு வருவதால் தக்காளி மட்டும் அல்லாமல் பெரும்பாலானவற்றின் விலை அதிகரித்துள்ளது. தக்காளி விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

இந்தியாவில் சில பகுதிகளில் மிளகாய் மற்றும் இஞ்சி விலை கிலோ 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை-யில் பச்சை மிளகாய் விலை கிலோ 100 ரூபாயாக மட்டுமே இருக்கும் வேளையில், கொல்கத்தாவில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியின் விலை 350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் கடந்த சில நாட்களாக சந்தைக்கு வரும் மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன என கோயம்பேடு மொத்த விலை சந்தை வியாபாரி டி முத்துக்குமார் ஈடி-யிடம் தெரிவித்துள்ளார். சென்னையின் ஒரு நாள் தேவை 200 டன் மிளகாய், ஆனால் தற்போது வெறும் 80 டன் மட்டுமே வருகிறது.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதி மிளகாய் தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மூலம் ஈடுசெய்யப்பட்டு வருகிறது, இப்படியிருக்கும் வேளையில் இந்த மாநிலத்திலேயே விளைச்சல் குறைந்து தமிழ்நாட்டுக்கான வரத்து குறைந்துள்ளதால் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
கெல்கத்தாவில் மிளகாய் விலை ரீடைல் சந்தையில் கிலோவுக்கு 400 ரூபாய் வரையில் உயர காரணம், சப்ளை டிமாண்ட் பிரச்சனை தான். சந்தைக்கு போதுமான அளவு மிளகாய் வரத்து இல்லை என்பதால் விலை அதிகரித்துள்ளது,
இந்திய மிளகாய் உற்பத்தி சந்தையில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மட்டும் சுமார் 60 சதவீத சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இதேவேளையில் கர்நாடகா 10 சதவீத சந்தை வர்த்தகத்துடன் இந்திய மிளகாய் உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications