2 நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இரண்டு நாள் விலை உயராமல் இருந்த காரணத்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர், ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2 நாள் இடைவெளிக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து இடத்திலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இதேவேளையில் இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிந்துள்ளது.

ரீடைல் எரிபொருள் சந்தை

ரீடைல் எரிபொருள் சந்தை

இந்திய ரீடைல் எரிபொருள் விற்பனை சந்தையில் கடந்த 18 வருடத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வருடத்தில் தான் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 ரூபாய்க்கும் அதிகமாகவும், டீசல் விலை 25 ரூபாய்க்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது.

2வது நாள் இடைவெளி

2வது நாள் இடைவெளி

இந்நிலையில் 2வது நாள் இடைவெளிக்குப் பின்பு அறிவிக்கப்பட்டு உள்ள விலை உயர்வின் மூலம் இந்தியத் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.94 ரூபாயாகவும், டீசல் விலை 96.67 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இன்று இந்தியா முழுவதும் சராசரியாக 35 பைசா வரையில் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை (Oct 27)

பெட்ரோல் விலை (Oct 27)

சென்னை - 104.83 ரூபாய், டெல்லி - 107.94 ரூபாய், கொல்கத்தா - 108.45 ரூபாய், மும்பை - 113.80 ரூபாய், பெங்களூர் - 111.70 ரூபாய், ஹைதராபாத் - 112.27 ரூபாய், கோழிக்கோடு - 108.42 ரூபாய், போபால் - 116.62 ரூபாய், இந்தூர்- 116.66 ரூபாய்.

டீசல் விலை (Oct 27)

டீசல் விலை (Oct 27)

சென்னை - 100.92 ரூபாய், டெல்லி - 96.67 ரூபாய், கொல்கத்தா - 99.78 ரூபாய், மும்பை - 104.75 ரூபாய், பெங்களூர் - 102.60 ரூபாய், ஹைதராபாத் - 105.46 ரூபாய், கோழிக்கோடு - 102.24 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.69 சதவீதம் சரிந்து 84.07 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.52 சதவீதம் சரிந்து 85.95 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+