2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு கடன்களுக்கான வரி சலுகைகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறின.

மற்றொருபுறம் தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய மாநிலங்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அபார அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நீண்ட கால வளர்ச்சியை இலக்காக கொண்டும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு துறையினரும் பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .இத்தகைய சூழலில் பட்ஜெட் முடிந்த கையோடு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. புனிதமான தைப்பூச திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும் நல்ல ஆரோக்கியம் , வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும் என அதில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரும் நிலையில் பிரதமரின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் சிறப்பு கனிம வள தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதிகை மலையில் மலையேற்ற திட்டம், பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலா திட்டம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் இடத்தில் சிறப்பு மையம் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு அதிவேக ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications