கொரோனா காலத்தில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த காரணத்தால் டெக் நிறுவனங்களின் மதிப்பீடு அதிகரித்து இருந்த காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றும் திட்டத்தைக் கடந்த 2 வருடமாக ஒத்திவைத்து இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இந்திய ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனத்தைக் கைப்பற்றத் துவங்கியுள்ளது.
விப்ரோ
இரண்டு நாட்களுக்கு முன்பாக விப்ரோ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைத் தேர்ந்த Edgile என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றியது, இதைத் தொடர்ந்து தற்போது Mphasis பிரிட்டன் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றி நிர்வாக ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.
Mphasis
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களில் மிக முக்கிமானவை Mphasis, இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகப் பிரிட்டனை சேர்ந்த Ardonagh என்னும் நிறுவனத்தின் பகிரப்பட்ட சேவை நிறுவனமான மிரால்ட் லிமிடெட் (எம்ஆர்எல்) 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
Ardonagh குரூப்
Mphasis நிறுவனத்தின் பிரிட்டன் கிளை நிறுவனமான Mphasis கன்சல்டிங் லிமிடெட் தற்போது Ardonagh Group, UK நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் மிடில் மற்றும் பேக் ஆபீஸ் பணிகளுக்கான தனிப் பிரிவை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க உள்ளதாகப் பிரிட்டன் பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
5 முதல் 7 வருடம்
மேலும் Mphasis கன்சல்டிங் லிமிடெட் விரும்பினால் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் அடுத்த 5 முதல் 7 வருடத்தில் கைப்பற்றும் வாய்ப்பை Ardonagh உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகக் குழு
Ardonagh நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைத் தற்போது பிரிட்டன் கிளை நிறுவனமான Mphasis கன்சல்டிங் லிமிடெட் கைப்பற்றியுள்ளதால் நிர்வாகக் குழுவில் 3 முதல் 7 பேரை தனது நிறுவனத்தின் விருப்பப்படி நியமித்துக்கொள்ள முடியும். மேலும் Ardonagh நிறுவனத்தின் சேவைகளையும், Mphasis வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும்.
விப்ரோ - Edgile நிறுவனம்
இதேவேளையில் விப்ரோ நிறுவனம் Edgile நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2001 முதல் இயங்கி வரும் சைபர்செக்யூரிட்டி மற்றும் ரிஸ் கன்சல்டிங் நிறுவனத்தை 230 மில்லியன் டாலருக்கு முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. Edgile நிறுவனம் சுமார் 182 ஊழியர்கள் உடன் 44 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டும் வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
விப்ரோ மற்றும் Mphasis நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களை அடுத்தடுத்து கைப்பற்ற முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிறுவன கைப்பற்றல் மூலம் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வர்த்தகம் எளிதாகவும், விரைவாகவும் விரிவாக்கம் செய்ய முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications