இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் சார்பாக நாட்டில் வறுமையை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைப்பது ஆகவே அண்மையில் வெளியாகி இருக்கும் தரவுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டில் படிப்படியாக வறுமை குறைந்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.
எஸ்பிஐ அறிக்கை: குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை விகிதம் என்பது 4.6% என குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மையில் தான் உலக வங்கி இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு வறுமை விகிதம் என்பது 5.3 சதவீதமாக குறைந்து இருக்கிறது என ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை இருக்கிறது.

உலக வங்கி அறிக்கை: மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் நல்ல பலனை தருவதாக இருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கும் எஸ்பிஐ, அண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள கணிப்பையும் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது. நவீன முறைகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வறுமை ஒழிப்பு தொடர்பான விவரங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
26.9 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: இந்தியாவில் அண்மையில் வெளியான வீடுகளின் நுகர்வு செலவின போக்கு ஆய்வறிக்கை என்பன உள்ளிட்ட சமகால தரவுகளை பார்க்கும் போது நாட்டில் வறுமை விகிதம் குறைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் 2011 - 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 34.47 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவே 2023 ஆம் ஆண்டு 7.5 கோடியாக குறைந்திருக்கிறது என்றும் இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 26.9 கோடி மக்களை தீவிர வறுமையில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4.6% என குறைந்த வறுமை: இதனை சுட்டிக்காட்டி இருக்கும் எஸ்பிஐ 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் தீவிர வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 சதவீதமாக குறைந்திருக்கும் என கணித்திருக்கிறது. வீடுகளின் நுகர்வு செலவின ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு சமகால ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த கணிப்பினை வெளியிடுவதாக எஸ்பிஐ கூறுகிறது.
Modified Mixed Recall Period (MMRP) என்ற மதிப்பீட்டின்படி கிடைத்த தரவுகளை ஆய்வு செய்வதில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications