பாலிவுட் ஐகான் அமிதாப் பச்சனின் பேரனான அகஸ்தியா நந்தா, மும்பையில் புதிய ஹோட்டல் ஒன்றுக்கு முதலீடு செய்து பிசினஸ் உலகில் கால் பாதித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தி ஆர்ச்சீஸ்" என்ற படத்தின் மூலம் அறிமுகமான இளம் நடிகரான அகஸ்தியா நந்தா தற்போது "ஹம்" என்ற திட்டத்திற்காக முதலீடு செய்து தனது கவனத்தை சமையல் உலகின் பக்கம் திருப்பியுள்ளார்.
அகஸ்தியா நந்தாவின் முதலீடு பற்றிய விரிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரை வாழ்க்கையில் மட்டுமின்றி பிசினஸிலும் அகஸ்தயா ஈடுபட்டு வருகிறார் என்பதை இவருடைய முயற்சி எடுத்துக்காட்டுகிறது. ப்ராஜெக்ட் "ஹம்" என்பது மும்பையில் உள்ள "ஹோம் டு டேபிள்" உணவகம் ஆகும். இது ஆரோக்கியமான உணவை வழங்குவதற்காகவும், உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் கட்டப்பட்டு வருகிறது. பெயரிலேயே இருப்பதைப் போல வீட்டில் சமைக்கப்படும் உணவை ஹோட்டல்களிலும் கொண்டு வரும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சினிமா மட்டுமின்றி ஆரோக்கியம் மற்றும் நிலையான வாழ்விலும் அகஸ்தியா நந்தாவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ஒரு அறிக்கையில் அகஸ்தியா இந்த ப்ராஜெக்ட் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஹம் பிராஜெக்ட் குடும்பத்தில் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டணி முதலீடு மட்டுமல்ல. இது நமது ஆரோக்கியம் மற்றும் விவசாய சமூகம் என இரண்டிற்கும் நன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார்.

அகஸ்தியா ஹம்-இல் முதலீடு செய்ய முடிவு செய்தது, அவரது தாத்தாவின் சொந்த முயற்சிகளை நினைவூட்டுகிறது. அமிதாப் பச்சன் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தனது பல்வேறு முதலீடுகளுக்கு பெயர் பெற்றவர். பச்சன் குடும்பத்தினர் வணிகப் புலமை மற்றும் சமூக அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்கள். அதேபோல தற்போது அவருடைய பேரனும் சமூக நலனை கருத்தில் கொண்ட ஹம் ப்ராஜெக்டில் முதலீடு செய்ய உள்ளார்.
அகஸ்தியா நந்தா மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் திரைக்கு அப்பால் பல்வேறு பிசினஸ்களை செய்து கொண்டிருக்கின்றனர். நயன்தாரா 9 ஸ்கின் என்ற பிராண்டை தொடங்கி சருமத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதேபோல பல பிரபலங்களும் தங்களுக்கு என பிசினஸ் செய்ய தொடங்கி அவற்றை சிறப்பாக செய்து கொண்டுள்ளனர். அந்த வழியில் தற்போது இவரும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications