இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குவது எந்த வயதினர் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க?

இன்று நம் நாட்டில் சுயமாக தொழில் செய்வோர்களை தவிர, வேலைக்கு சென்று மாத சம்பளம் வாங்குபவர்களே அதிகம். சுயமாக தொழில் செய்பவர்கள் கையில் மாதம் முழுவதும் பணம் புழங்கினாலும், அது அவர்களுக்கு செலவுகளை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில பெரிய தொழில் செய்பவர்கள் கோடிகளிலும் புரளுகிறார்கள். ஆனால், சிலர் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அவர்களின் சம்பளம் என்று கணக்கிட்டால் மாதம் குறைந்தபட்சம் ரூ.50000 மேல் கூட இருக்கும். சுய தொழிலில் லாபம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் 35 வயதை தாண்டியவர்களாகே உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு தொழில் குறித்த அனுபவம் இருக்கும். எனவே, அவர்கள் வீழ்வது அரிது.

தற்போது, இந்தியாவில் வேலைக்கு செல்வோர்கள் அதிகம் இருக்கும் நிலையில், எந்த வயதினர் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள், எந்த துறையில் எந்த நிலையில் உள்ளார்கள் என்பது குறித்த குட் ரிட்டர்ன்ஸ் சார்பாக மக்கள் மத்தியில் பிரத்யேக கேள்விகள் கேட்கப்பட்டது. அதுகுறித்து சிலரின் கருத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குவது எந்த வயதினர் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க?

இந்தியாவில் இன்று கோடிக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் காலையில் விழிக்கும் முதல் நொடியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்கள். அது பேருந்து, ரயில், பைக்கில் செல்லும் பயணம் அல்ல. அவர்களின் கனவுகள் நிறைவேறும் பாதையை நோக்கிய பயணம்.

இந்த நாட்டில், பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில், அதிக வேலைச்சுமையுடன், கனவுகளை நினைவாக்க ஒரு எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். அவர்கள் மீது சமூகம் எதிர்பார்ப்பு வைத்திருக்கும். அவர்கள் மீது குடும்பம் நம்பிக்கை வைத்திருக்கும். அவர்கள் மீது அவர்களே ஒரு கனவு வைத்திருப்பது தான் அவர்களின் சக்தி.

இந்தியாவை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வணிகம், மார்க்கெட்டிங், வங்கி மற்றும் நிதி சேவை, கல்வி மற்றும் பயிற்சி, மருத்துவம், சமையல், தொழில்துறை, கட்டுமானம், தகவல் சேவை, விளையாட்டு, ஊடகத்துறை என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இதில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறை என்றால் அது ஐடி மற்றும் வங்கி துறைகள் தான். ஐடி துறையில் அனுபவம், தொழில்நுட்ப திறன்கள், பதவி, நகரங்களை பொறுத்து சம்பளம் இருக்கும்.

ஐடி துறை சம்பளம் : 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜூனியர் டெவலப்பருக்கு (Freshers) மாதம் ரூ.25,000 முதல் ரூ.40,000 சம்பளம் இருக்கும். 25 வயது முதல் 35 வயது வரையுள்ள மிடில் லெவல் டெவலப்பருக்கு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும். 30 வயது முதல் 35 வயது வரையுள்ள சீனியர் டெவலப்பருக்கு மாதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கும். 35 வயது முதல் 40 வயது வரையுள்ள மேலாளர்/பிராஜக்ட் மேனேஜருக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மாத சம்பளம் இருக்கும். 40 வயதுக்கு மேல் உள்ள மேனேஜ்மென்ட் / டெக் டைரக்டர் / தலைமைப் பதவிகளுக்கு மாதம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் இருக்கும்.

எந்த துறையில் சம்பளம் அதிகம்..?: தகவல் தொழில்நுட்பம் (IT & Software) ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், மருத்துவம் (Doctors, Surgeons, Specialists) ரூ.70 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையும், வங்கி மற்றும் நிதி சேவைகள் (Banking & Finance) ரூ.40 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையும், மேனேஜ்மென்ட் (Senior Managers, CXOs) ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், தொழில்நுட்ப விற்பனை (Tech Sales & Marketing) ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையும் ஆய்வுக்கூடங்கள் & ஆராய்ச்சி (R&D Scientists) ரூ.60 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையும், செயற்கை நுண்ணறிவு (AI & Machine Learning) ரூ.80 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது.

எந்த பதவிக்கு சம்பளம் அதிகம்..?: CEO (Chief Executive Officer) - மாதம் ரூ.5,00,000 முதல் ரூ.50,00,000
CTO (Chief Technology Officer) - மாதம் ரூ.3,00,000 முதல் ரூ.25,00,000
CFO (Chief Financial Officer) - மாதம் ரூ.3,00,000 முதல் ரூ.20,00,000
Surgeon / Specialist Doctor - மாதம் ரூ.2,00,000 முதல் ரூ.30,00,000
Data Scientist / AI Specialist - மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.10,00,000
Senior Manager / Director - மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.8,00,000
Investment Banker - மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.7,00,000
Product Manager - மாதம் ரூ.80,000 முதல் ரூ.5,00,000

மாதம் ரூ.20,000 சம்பளம் - வாழ்க்கையின் சவால்கள் : இன்றைய பொருளாதார சூழ்நிலையில், ஒருவரின் மாத வருமானம் ரூ.20,000 என்றால், அது பெரிதாகத் தெரியலாம். ஆனால், உண்மையில் அது எப்படிப்பட்ட வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதை உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு குடும்பத்துக்குத் தலைவனாக அல்லது தலைவியாக இருக்கிறார் அந்த நபர். கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். வாழும் இடமோ ஒரு சிறிய வாடகை வீடு. மாத சம்பளம் ரூ.20,000. அந்தத் தொகையில் தான் குடும்பத்தின் அனைத்துக் கட்டணங்களும், தேவைகளும், ஆசைகளும் அடங்க வேண்டியிருக்கிறது.

வாடகைக்கு மட்டுமே ரூ.5,000 செலவாகிறது. மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு என்று அடிப்படை வசதிகளுக்கு இன்னும் ரூ.2,000 செலவாகிறது. உணவுக்கே தினசரி குறைந்தபட்சம் ரூ.150 செலவாகிவிடும். அப்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ.4,500 ஆகிறது. தினமும் காய்கறி, பருப்பு, நெய், பால், குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் இவை அனைத்தும் ஒரு கணக்கோடு தான் வாங்கப்படுகின்றன.

இவர்களின் வாழ்க்கையில் அப்பா-அம்மா என்ற ஒர் ஆதரவு தேவைப்படுகிறது. மாதம் ஒருமுறை இருவருக்கும் மருந்து வாங்க வேண்டும். அதை தவிர்க்க முடியாது. அதற்கு ரூ.1,000 செலவாகும். அவர்கள் சந்தோஷமாக இருக்க, ஒரு சிறிய சிரிப்பு கூட பெரும் பணம் போலவும் தோன்றும். ஒரே சட்டையை வாரம் மூன்று முறை அலசி அணிந்தாலும் பரவாயில்லை. ஆனால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாக வேண்டும். பொங்கல், தீபாவளி, பிறந்த நாள் இவை மட்டும் அல்ல, சாமான்ய நாட்களும் சவாலாகவே இருக்கின்றன.

தினமும் காலை வேலைக்கு கிளம்பும் போது அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கும். ஆனால் உள்ளே ஒரு கடல் போல போராட்டம் நடக்கும். ரூ.20,000 சம்பளத்தில் வாழும் ஒருவரின் வாழ்க்கை என்பது வெறும் நிழலல்ல. அது ஒரு போராட்டம், ஒரு கனவு, ஒரு அன்பும் சுமையும் கலந்த வாழ்க்கை.

18 - 25 வயதுக்குள்: இந்தக் கட்டத்தில் பெரும்பாலானோர் கல்லூரி முடித்து புதிதாகவே வேலைக்கு வருவோர். இவர்களின் மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும். இது பயிலும், கற்றுக்கொள்ளும் காலம். செலவுகள் குறைவாக இருந்தாலும், சேமிப்பும் மிகக்குறைவாகவே இருக்கும்.

26 - 35 வயதுக்குள்: இது வளர்ச்சி அடையும் முக்கியமான பருவம். உயர்கல்வி முடித்து நிபுணத்துவம் பெற்று வேலைவாய்ப்பு நிலைபெறும். இவர்களின் மாத வருமானம் ரூ.30,000 - ரூ.80,000 வரை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் ஐடி, பங்குச்சந்தை, வங்கி, அரசு பதவிகள், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பணிகளில் பணிபுரிவார்கள். இப்போது குடும்பம் தொடங்கும் நேரம் என்பதால் செலவுகள் அதிகம் இருக்கும். ஆனால், சம்பளமும் அதேபோல் உயரும்.

36 - 45 வயதுக்குள்: இது வாழ்க்கையின் முக்கிய கட்டம். இவர்களின் மாத சம்பளம் ரூ.70,000 - ரூ.2,00,000 வரை இருக்கும். இவர்கள் மேலாளர், வணிக தலைவர்கள், தொழில் தொடக்கங்கள், உயர் அரசு பதவிகளில் இருப்பார்கள். இந்த சமயத்தில் சொத்து வாங்குதல், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட காரணங்களால் முதலீடு அதிகரிக்கும்.

46 - 60 வயதுக்குள்: இந்த வயதில் அனுபவம் அதிகம் இருக்கும். ஆனால் தொழில்துறை போட்டி காரணமாக புதிய வாய்ப்புகள் குறையும். இவர்களின் மாத வருமானம் ரூ.50,000 - ரூ.1,50,000 வரை இருக்கும். ஆலோசகர், சிஇஓ, கல்வியாளர், அரசு ஊழியர் (ஓய்வு முன்) சேமிப்பு மற்றும் ஓய்வுத் திட்டங்கள் முக்கியம் ஆகின்றன.

60 வயதிற்கு மேல்: இது ஓய்வுபெறும் காலம். சிலர் தொழிலில் தொடர்ந்து இருந்தாலும், பெரும்பாலோர் ஓய்வூதியம் அல்லது தனியார் சேமிப்புகளைச் சார்ந்தே இருப்பர். இவர்களின் சராசரி மாத வருமானம் ரூ10,000 - ரூ.50,000 (ஓய்வூதியம் அல்லது முதலீட்டு வருமானம்) இருக்கும்.

'Engineer' என்ற பெயரால் மட்டும் வாழ்பவர்: மின் பொறியியல், கணினி, மெக்கானிக்கல், சிவில் என 4 ஆண்டுகள் நம்பிக்கையுடன் படித்த இளைஞர்கள் பலரும் இப்போது தினமும் காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரை ஐடி, கால் சென்டர், டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மாத சம்பளம் ரூ.18,000. அதில் ரூ.5,000 வீட்டுக்கு அனுப்புகிறார்கள். மீதி தொகையில் ரூ.6,000 வாடகைக்கு செல்கிறது. உணவுக்கு ரூ.4,000 செலவாகிவிடுகிறது. மீதி தொகையில் ஒரு ஷர்ட் கூட வாங்க முடியாத சூழலில் தான் தவிக்கிறார். ஆனால் அவர் யோசிப்பது, இது ஒரு தற்காலிக நிலைதான். நாளை நிச்சயம் முன்னேற முடியும் என்று நம்புகின்றனர்.

கார்ப்பரேட் கனவுகள் கொண்ட ஒரு போர் வீரர்: பெரும்பாலான MBA பட்டதாரி ஒரு சிறிய நிறுவனத்தில் ரூ.25,000 சம்பளத்திற்கு வேலை செய்கிறார். சொந்த ஊரிலிருந்து வந்து பெரிய நகரங்களில் ரென்ட் ஹவுஸ், பேருந்து பயணம், அலுவலக வேலை, மீட்டிங், டெட்லைன் என ஓர் இந்திய வாழ்க்கையை வாழ்கின்றனர். தினமும் காலை 7.30 மணிக்கு க்கு பஸ் பிடிக்க வேண்டியது. 1 மணி நேர பயணம். இரவில் சோர்வாக வீட்டிற்கு திரும்பும் போது, வீட்டின் வாசலில் இருட்டாக இருக்கிறது. ஆனாலும் மனதுக்குள் ஒரு வெளிச்சம் இருக்கும். "நாளை நம்மையும் ஒரு பெரிய நிறுவனத்தில் சிஇஓன்னு அழைப்பாங்க என்று.

பட்டம் ஏராளம்.. ஆனால், பணி இல்லை: பல பட்டதாரிகள் வேலை இல்லை என்பதால், சிறிய சிறிய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Data entry, Delivery boy, Sales executive, Bank BPO இவை தான் இப்போது அவர்களின் உலகம். அவர்களிடம் உங்கள் படிப்பு எதற்காக? என்று கேட்டோம். அதற்கு அவர் சிரித்தபடி, நீங்களும் கேட்டுடீங்களா...? "நான் இன்ஜினியர் படிச்சது டெலிவரி ஆப்ல லாகின் பண்ண தான்" என்றார். அந்த சிரிப்புக்குப் பின்னால் இருந்தது ஒரு வலி.

இந்தியாவில் சம்பள நிலை என்பது வயதிற்கேற்றார்போல் மாறும். ஆனால், அதுவே ஒரு காரணம் கிடையாது. கல்வி, தொழில்துறை தேர்வு மற்றும் நகரம் போன்றவை அதில் முக்கிய பங்காற்றுகின்றன. சாதாரண நிலையில், 35 - 45 வயது காலம் தான் அதிக வருமானம் உண்டாக்கும் முக்கியமான காலகட்டமாகும். பின்னர், சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் வாழ்க்கையை சமநிலையில் வைத்திருப்பது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+