தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் ஏஐ, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஏஐ, மனிதர்களைப் போல கற்று, பகுத்தாராய, சிக்கல்களை தீர்க்கும் திறனைப் பெறும் தொழில்நுட்பமாகும். இது மனிதர்களின் அறிவாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை உருவகப்படுத்த வடிவமைக்கப்பட்ட கணினி அமைப்புகளின் திறன் ஆகும். அதாவது, ஏஐ என்பது மனிதர்களைப் போல சிந்திக்கும் மற்றும் செயல்படும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகும்.
இந்த ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கூகுள் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகிறது. இது எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, AI-இயங்கும் தானியங்கி வாகனங்கள், சுகாதாரத்தில் மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் உற்பத்திகள் ஆகியவை சாத்தியமாகும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வரும் காலங்களில் இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'Agent Ambo AI' என்றால் என்ன..?: 'Agent Ambo AI' என்பது ஒரு ஏஐ முகவர் ஆகும். இது வேலை தேடுபவர்களை, குறிப்பாக பொறியாளர்கள் மற்றும் புதியவர்களை பல தளங்களில் வேலை விண்ணப்பங்களை தானியக்கமாக்குவதன் மூலம் ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது TickBig என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வேலை தேடல் உதவியாளர் ஆகும்.
இது எப்படி வேலை செய்கிறது..?: நீங்கள் உங்கள் ரெஸ்யூம் அல்லது வேலை விருப்பங்களை இந்த AI-க்கு வழங்குகிறீர்கள். பின்னர், AI உங்கள் சார்பில் பல்வேறு வேலை வாய்ப்பு தளங்களில் தேடும். பின்னர், உங்களுக்கேற்க வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை தானாகவே விண்ணப்பிக்கும். மேலும், உங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதையும், அடிக்கடி உங்களுக்கு தெரியப்படுத்தும்.
நன்மைகள் என்ன..?: இதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு சாட் மூலம் பல வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும். உங்களுக்கான வேலையை தவறவிடாமல் ஏஐ ஏஜெண்ட் தேடுகிறது. குறிப்பாக, இன்ஜினியரிங் மற்றும் புதிய பட்டதாரிகளுக்காக சிறப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
TickBig என்றால் என்ன..?: TickBig என்பது பல்வேறு துறைகளில் உள்ள திறமைமிக்க நபர்களை (Professionals) உங்களிடம் கொண்டு வரும் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவை தளம் ஆகும். இதன் மூலம் உங்களுக்கு புகைப்பட கலைஞர்கள் (Photographers), மார்க்கெட்டிங் நிபுணர்கள் (Marketers), ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் (Real Estate Agents), டிசைனர், வீடியோ எடிட்டர், கட்டட வடிவமைப்பாளர் மற்றும் பலரை உங்களிடம் TickBig கொண்டு வரும்.
TickBig உங்களுக்காக என்ன செய்கிறது..?: நீங்கள் தேடும் சேவையை பூர்த்தி செய்யக்கூடிய நபரை விரைவாக கண்டறிந்து பரிந்துரை செய்கிறது. அதன் AI உதவியாளர்கள் (Agent Ambo போன்றவை), உங்களுக்கேற்ப தொழில்முனைவோரை தானாக இணைக்கும். இது வேலை தேடுபவர்களுக்கும், சேவை தேடுபவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக செயல்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications