சென்னையை விட்டு போவதாக அறிவித்த நிறுவனம்: களத்தில் குதித்த விஜய் அரசு.. அடுத்து நடந்த டிவிஸ்ட்..!!

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன, ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் அலுவலகங்களை மூடி விட்டு வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், அது உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளது.

அகிலிசியம் (Agilisium) என்பது லைஃப் சயின்ஸ் மற்றும் ஏஐ துறையில் இயங்கும் ஒரு நிறுவனம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் தனது ஆசிய தலைமையகத்தை சென்னையில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் திடீரென சென்னையிலிருந்து தங்களின் அலுவலகத்தை ஐதராபாத்திற்கு மாற்ற போவதாக அறிவித்தது. இதனால் சென்னை அலுவலகம் மூடப்படும் அபாயம் ஏற்பட்ட நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனே களத்தில் இறங்கி அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலேயே தக்கவைத்து, மாநிலத்தில் அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையை விட்டு போவதாக அறிவித்த நிறுவனம்: களத்தில் குதித்த விஜய் அரசு.. அடுத்து நடந்த டிவிஸ்ட்..!!

அகிலிசியம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு இதனை நெகிழ்ச்சியுடன் லிங்குடின் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களின் ஆசிய தலைமையகத்தை ஐதராபாத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக அகிலிசியம் நிறுவனம் அக்டோபர் 27-ஆம் தேதி அறிவித்தது. ஆனால் அடுத்த நாள் காலை 8 மணிக்கு, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் அதிகாரி அருண் ஜார்ஜ் மேத்யூ இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது தமிழ்நாட்டில் அகிலிசியம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அரசு எவ்வாறு உதவ முடியும் என கேட்டாராம். அதே நாள் காலை 11 மணிக்குள், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார், ஐஏஎஸ் மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ தீபக் ஜேக்கப், ஐஏஎஸ் ஆகியோரும் இவரிடம் பேசியுள்ளனர்.

Also Read

அதே நாளில் மதியம் 1 மணிக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலேயே உங்கள் நிறுவனம் வளர்வதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசு என்ன செய்ய வேண்டும்? என நேரடியாக கேட்டார் என கூறியுள்ளார்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் இந்த உடனடி அக்கறையை தொடர்ந்து, அகிலிசியம் நிறுவனத்தின் திட்டங்களை அவர்களிடம் விளக்கியதாக ராஜ் பாபு குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் தங்களது நிறுவனத்தில் சுமார் 900 பேர் பணியாற்றி வருகின்றனர். அடுத்த கட்டமாக கோயம்புத்தூர், ஓசூர் மற்றும் பிற நகரங்களுக்கும் நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை 2,000 முதல் 3,000 ஆக உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்தாராம்.

சென்னையை விட்டு போவதாக அறிவித்த நிறுவனம்: களத்தில் குதித்த விஜய் அரசு.. அடுத்து நடந்த டிவிஸ்ட்..!!

இதனை அடுத்து நவம்பர் 6-ஆம் தேதி, தலைமை செயலகத்தில் நேரடியாகவே இவர் சென்று அதிகாரிகளை சந்திப்பு பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக சம்பளம் தரும் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ விஷயங்களை பேசியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

தமிழக அரசின் இந்த அணுகுமுறை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அகிலிசியம் சிஇஓ, நான் யாரையும் அணுகவில்லை; அவர்களாகவே என்னை தேடி வந்தார்கள் நேரடியான கேள்விகளை கேட்டார்கள், நான் சொல்வதை கவனித்தார்கள், அன்றைய தினமே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்ந்தார்கள். யாரும் தங்களின் அதிகாரத்தை பற்றி பேசவில்லை; அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது மட்டுமே பேச்சாக இருந்தது. அகிலிசியம் நிறுவனத்தை நடத்தும் எனது 12 ஆண்டுகால அனுபவத்தில் இப்படியொரு அரசாங்க அணுகுமுறையை நான் பார்த்ததே இல்லை என பாராட்டியுள்ளார்.

முதலீட்டாளர்கள் கதவை தட்டும் வரை காத்திருக்காமல், அரசே முன்வந்து தொலைபேசியில் அழைத்து உதவுவதுதான் அடுத்த பத்தாண்டுகளுக்கான வேலைவாய்ப்புகளையும் திறமையாளர்களையும் ஒரு மாநிலம் வென்றெடுப்பதற்கான வழி என்றும், தமிழ்நாட்டிலேயே தங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு தவறு செய்தால் எப்படி உடனடியாக விமர்சனங்களை முன் வைக்கிறோமோ அதே போல அவர்கள் சரியாக ஒரு விஷயத்தை செய்யும் போது அதனை பாராட்டவும் வேண்டும் என கூறியுள்ள அகிலிசியம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு, ஒவ்வொரு தொழில் நிறுவனரும் இந்த அதிகாரிகளிடம் நிச்சயம் ஒரு முறை பேசி பாருங்கள் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+