விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இருந்தால் அது ஒரு சிறந்த தொழிலாக அமையும்.
இப்போது விவசாயத் துறையில் தொழில் தொடங்குவதற்கு ஏராளமான இளைஞர்கள் முன் வருகின்றனர். இதுபோக மத்திய மாநில அரசுகள் விவசாய துறைக்கு அதிகப்படியான மானியத்தை தாராளமாக வழங்குகின்றன.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழிப் பண்ணை, பால், பழம், காய்கறி பண்ணைகள் நல்ல லாபம் தரும் தொழில்களாக உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களில் பேக் ஹவுஸ் சிறந்த வழியாகும்.
இந்தியாவில் பழங்கள், காய்கறிகள் ஏராளமான அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் அவற்றை பத்திரமாக பேக்கேஜ் செய்து அனுப்ப வேண்டும். இங்கு தான் பேக் ஹவுஸின் முக்கியத்துவம் வருகிறது. பேக் ஹவுஸில் பழங்களையும் காய்கறிகளையும் சுகாதாரமான முறையிலும் கவனமாகவும் பேக் செய்ய வேண்டும்.
பேக் ஹவுஸ் தொழிலுக்கு பிகார் அரசு மானியம் வழங்குகிறது. தனிநபர் அல்லது விவசாயிகள் குழுவாக சேர்ந்து தொழில் ஆரம்பிப்பதை வைத்து இந்த மானியம் 50 முதல் 75 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பிகார் அரசின் விவசாயத்துறையின் தோட்டக்கலை இயக்குநரகம் செயல்படுத்துகிறது. ஒரு ஆலையின் விலையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் தரப்படுகிறது.
தனி நபர்களுக்கு ரூ.2 லட்சத்தை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்குகின்றனர். செலவில் பாதி மானியமாக கிடைக்கும். இதையே விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து செய்ய வந்தால் ரூ.3 லட்சம் வரை மானியம் தரப்படுகிறது.
இந்த மானியத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளியதாகும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சில முக்கிய ஆவணங்களை உங்கள் மாவட்ட தோட்டக் கலை துறைக்கு அனுப்ப வேண்டும். பேக் ஹவுஸை அமைத்தவுடன் விவசாயத்துறை அதிகாரிகள் வந்து அதை சரி பார்ப்பர். இது முடிந்தவுடன் மானியத்தொகை விவசாயிக்கு வந்து சேரும்.
horticulture.bihar.gov.in என்ற பிகார் அரசின் விவசாயத்துறையின் தோட்டக்கலை இயக்குநரகத்தின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை அனுப்பலாம். விரைவில் அவை பரிசீலிக்கப்பட்டு மானியம் தரப்படும்.


Click it and Unblock the Notifications