சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு பகுதிகளிலும் சாலை திட்டப் பணிகளை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
குறிப்பாக மதுரை திருச்சி, திருநெல்வேலி , கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சாலை , பாலம் மற்றும் மேம்பால திட்ட பணிகளை விரைவில் முடிக்கும் பொருட்டு நிலங்களை கையகப்படுத்துவது, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை திமுக அரசு வேகப்படுத்தியுள்ளது.

அரசு உள்கட்டமைப்பு ரீதியான திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது அரசு தங்களுடைய சாதனைகளாக இவற்றை குறிப்பிடுவதற்காக திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் கூட சிறப்பு திட்டங்களுக்கான அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சாலை சம்பந்தமான திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கூடிய விரைவில் திருச்சியில் தலைமை தபால் அலுவலகம் மற்றும் கோர்ட் ரவுண்டானா பகுதிகளில் 300 கோடி மதிப்பில் பாலம் கட்டமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
அதேபோல ஒடத்துறை சாலை அருகே காவிரி பாலம் மற்றும் வள்ளாட்சிபுரம் பகுதியில் 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த அரசு தீவிரமாக இருக்கிறது.
மதுரையை பொறுத்தவரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் யானைக்கல் பகுதியை இணைக்கும் பாலத்தை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன, அதேபோல அவுட்டர் ரிங் சாலையில் சிக்காம்பட்டி மற்றும் ஆலம்பட்டி பகுதியில் சாலை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரிங் ரோடு மற்றும் தொண்டி ரோடு பகுதியில் புதிதாக 8.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைப்பதற்கு 85 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கூடிய விரைவில் இதற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு அரசு ஒப்புதல் தரும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கோயம்புத்தூரிலும் சாய்பாபா காலனி பகுதியில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சிங்காநல்லூர் மற்றும் ஜெய் சாந்தி தியேட்டர் பகுதியிலும் சரவணம்பட்டி பகுதியிலும் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. பர்கூர் சிப்காட் பகுதியில் சாலை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
வேலூரை பொறுத்தவரை பைபாஸ் சாலை, ரிங் ரோடு மற்றும் பாலங்கள் அமைப்பதற்கு என முறையே 522 கோடி, 300 கோடி ,91 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைபாஸ் சாலை அமைப்பதற்கும், மதுரை கன்னியாகுமரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications