புதுவிதமான தொழிலை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டோர் பலர். அப்படிப்பட்ட ஒரு பிராண்டைப் பற்றியும் அதன் நிறுவனரை பற்றியும் தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம். தேவையில்லை என்று நாம் நினைக்கும் பொருட்களை வைத்து பலவிதமான பொருட்களை செய்து விற்பனை செய்து வருகிறார் 29 வயதான ஷிகா ஷா என்ற பெண்மணி. ஆல்டர்நேட்டிவ் மெட்டீரியல்ஸ்-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இவர்தான். இந்நிறுவனத்தில் விவசாயக் கழிவுகளை வைத்து ஜவுளி தயாரிக்க பயன்படும் பைபர் தயாரிக்கப்படுகிறது.
இவர் விவசாயக் கழிவுகள் மற்றும் ஜவுளி தொழிலில் ஏற்படும் மாசுபாடு பிரச்சனையை தீர்க்கும் வழிகளை கண்டுபிடித்துள்ளார். ஆல்டர்நேட்டிவ் மெட்டீரியல்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து விவசாயக் கழிவுகளை வாங்கி அதை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆல்டாக்-ஆக மாற்றுகிறது. அதாவது இது ஒரு பைபர். மற்ற பொருட்களுடன் கலந்து துணி நெய்வதற்கு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதன் பிறகு இங்கு உற்பத்தி செய்யப்படும் நூலை வைத்து துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த பிராசஸில் கிடைக்கும் துணை தயாரிப்புகள் காகிதம் மற்றும் பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. Altag ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் 500 நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
ஷிகா ஷாவின் தந்தையான விஷ்ணு ஷா ஆட்டோ மொபைல் கழிவுகளை உலோகங்களாக மறுசுழற்சி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதை பார்த்து வளர்ந்த ஷிகா ஷா தானும் மறுசுழற்சி செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். "வேஸ்ட் டு வேல்யூ" சப்ளை செயின் கான்செப்ட்டைக் கேட்டே வளர்ந்தவர் இவர்.
அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பாப்சன் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் தலைமைத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தான் டீனேஜராக இருந்தபோது உலகிற்கு இன்னும் என்ன தேவை என்று யோசித்தேன். என் அம்மாவின் ஊக்கத்தால் நான் 19 வயதில் NGO-க்களில் தன்னார்வ தொண்டு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இளம் வயது முதலே சமூகத்திற்கு தேவையானது என்ன என்பதை தேட ஆரம்பித்துள்ளார் ஷிகா ஷா. ஆனால் சமூகத்தில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அதை ஒரு வணிகமாக செய்ய வேண்டும் என்று உணர்ந்த ஷிகா ஷா அதற்கான பணியை துவங்கியுள்ளார்.
அப்போதுதான் ஜவுளி உற்பத்தியில் ஏற்படும் மாசுபாட்டை ஒழிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனைத் தோன்றியுள்ளது. அவர் முதுகலைப் பட்டம் பெற்றபோது செய்த ப்ராஜெக்ட் விவசாயக் கழிவுகளைப் பற்றிய விஷயங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தது. டிசம்பர் 2019-ஆம் ஆண்டில் AltMat என்பதைத் தொடங்கியுள்ளார். அவரது தந்தை நிறுவனத்திற்கான வழிகாட்டுதலை வழங்கினார்.
பெரும்பாலான ஜவுளிகளில் 57% பாலிஸ்டர் உள்ளது. இது ஒரு வகையான பிளாஸ்டிக் ஒவ்வொரு முறையும் அதை வாஷ் செய்யும் போது கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸை வெளிடுகிறது. உலகில் 2.4 சதவீதம் விவசாய நிலத்தில் பருத்தியை பயிரிட 24 சதவீத பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல 3 ஜோடி ஜீன்ஸ் பேண்ட் செய்வதற்கு 20,000 லிட்டர் தண்ணீர் பயன்படுகிறது. இதன் காரணமாகவே மாற்று வழியை சிந்திக்க ஆரம்பித்தேன் என்று கூறுகிறார் இந்த சாதனை பெண்மணி.
நாங்கள் நிலையாக செயல்படுவதால் ஆண்டுக்கு 40 லட்சம் ஆடைகளை தயாரிக்க போதுமான பைபர் உற்பத்தி செய்யப்படுகிறது. எங்களின் தற்போதைய ஆண்டு உற்பத்தி 1000 டன். 2023-ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் உருவாக்கத்துடன் இப்போது ஆண்டுக்கு 30 கோடி மதிப்புள்ள ஃபைபரை உற்பத்தி செய்கிறோம். AltMat தற்போது 11 பெரிய பிராண்டுகளுக்கு பைபர் வழங்கி வருகிறது. அதோடு 30க்கும் மேற்பட்ட உலகளாவிய பிராண்டுகள் எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். 5 ஆண்டுகளில் 25 மடங்கு எங்களுடைய உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
விவசாயிகளின் முதன்மையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான பயிர்களை வளர்க்கின்றனர். அவர்களிடமிருந்து விவசாயக் கழிவுகளை வாங்கி பருத்தி போன்ற நூலாக மாற்றுகிறோம் என்று ஷிகா ஷா கூறியுள்ளார்.
ஆடைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்க இந்த நூல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆல்ட் மேட்டின் பைபர் ஒரு கிலோவிற்கு ரூ.330 முதல் ரூ.6350 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனால் அவை பட்டு மற்றும் கம்பளியை விட மலிவு விலையில் உள்ளன. ஆல்ட் மேட் குழு சுமார் 30 பயிர்களின் கழிவுகளை பயன்படுத்துகிறது.
யாருமே யோசிக்க முடியாத வகையில் கழிவுகளை வைத்து ஜவுளி தயாரிப்பிற்கான மூன்று பொருளை வழங்கும் இவருடைய யோசனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications