இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி ஆப் ஒன்று தற்போது எட்டெக் துறையில் முக்கிய பேசு பொருளாக உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் கல்வி சேவை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வருமானத்தை இழந்து தவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஏஐ நிறுவனங்களைக் காப்பாற்றுவது மட்டும் அல்லாமல் பல புதிய நிறுவனங்களையும் உருவாக்கி வருகிறது. சரி எட்டெக் நிறுவனத்தின் ஏஐ எந்த அளவுக்கு திறன் வாய்ந்தது என்பது குறித்து பலருக்கும் கேள்வி எழும்.

இந்திய மக்களால் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வை வியக்க வைக்கும் வகையில் வெறும் 7 நிமிடத்தில் வெற்றிகரமாக முடித்தது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடத்தில் அதிகப்படியான மதிப்பெண்களைப் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது இந்த ஏஐ சேவை.
PadhAI என்ற இந்த செயற்கை நுண்ணறிவு ஆப், UPSC தேர்வில் 200 மதிப்பெண்களில் 170 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. UPSC தேர்வு என்பது இந்திய ஆட்சித் துறை (IAS) போன்ற மதிப்புமிக்க அரசுப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வாகும். இது இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும்.
PadhAI இந்த கடினமான தேர்வை வெறும் ஏழு நிமிடங்களில் முழு தேர்வு முடித்துள்ளது மட்டும் அல்லாமல், இந்த தேர்வில் தேர்ச்சி பெற பொதுவாகத் தேவைப்படும் மதிப்பெண்ணை (100 க்கும் குறைவாக இருக்கும்) கடந்துள்ளது.
இந்த PadhAI சந்தையில் இருக்கும் பிற முக்கியமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை விட இது மேம்பட்ட செயல்பாட்டைக் காட்டியுள்ளது,
PadhAI பெற்றுள்ள இந்த மதிப்பெண் தேசிய அளவில் முதல் இடத்தில் இருக்கலாம், அல்லது டாப் பத்து இடங்களில் ஒன்றாக இருக்கும் என இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தக் செயலி, ஐ.ஐ.டி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. டெல்லியில் உள்ள லலிட் ஹோட்டலில் கல்வித்துறை, UPSC சமூகம் மற்றும் ஊடக வல்லுநர்கள் முன்னிலையில் பொதுமக்கள் பார்வையில் தேர்வு எழுதி அதை லைவ்ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.
"இது கடந்த 10 ஆண்டுகளில் UPSC தேர்வுகளில் பெறப்பட்ட உயர்ந்த மதிப்பெண். இதுபோன்ற நிகழ்வு முதல் முறையாக இருந்தாலும், வரும் ஆண்டுகளில், பல கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் விரைவாகவும் துல்லியமாகவும் தேர்வுக் முடிக்கும் கட்டமைப்பை உருவாக்குவது இயல்பான ஒன்றாக மாறும்" என்று padhAI இன் தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயா மங்களம் தெரிவித்தார்.
PadhAI என்பது UPSC மற்றும் IAS தேர்வுக்குத் தயாராகுவதில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கல்வி ஆப் ஆகும்.
மாணவர்களின் படிப்பு செயல்முறையை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் விரிவான சேவைகளை வழங்குவதற்காக இந்த ஆப் உறுதியளிக்கிறது.


Click it and Unblock the Notifications