அமெரிக்காவில் உள்ள முன்னணி வங்கிகளின் அமைப்புகளில் ஊடுறுவி ஏஐ ஏஜெண்டுகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவும் சுயமாக செயல்பட்டு ஏஐ ஏஜெண்டுகள் இவ்வாறு தகவல்களை திருடி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
Bank of America, JPMorgan Chase, Morgan Stanley, மற்றும் Wells Fargo போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ஏஐ ஏஜெண்டுகள் ஊடுருவி தகவல்களை பெற்று பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் ஏஐ ஏஜெண்டுகள கொண்டு வாடிக்கையாளர்கள் நிதி மேலாண்மை செய்வது அதிகரித்துளது. இதற்காக தங்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு ஏஐ கருவிகளிடம் பகிர்ந்து விடுகின்றனர். வாடிக்கையாளர்கள் தாங்களாகவே சொந்த கணக்கை மேலாண்மை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான வங்கிகளின் அறிவுரை. ஆனால், இந்த ஏஐ ஏஜெண்டுகளை பயன்படுத்துவது அந்த விதிகளை மீறும் செயல்.

இந்த ஏஐ ஏஜெண்டுகள் வெறும் நிதி தரவுகளை பார்ப்பதோடு நிற்காமல், வாடிக்கையாளர்கள் வழங்கிய கட்டளைகளையும் மீறி தாங்களே சுயமாக சில பண பரிமாற்றங்களை செய்ய முயல்வதாகவும், சில சந்தர்ப்பங்களில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்புகொண்டு பேசுவதாகவும் வங்கிகள் கண்டறிந்துள்ளன.ஒரு வங்கி கணக்கில் நடக்கும் செயல்பாடுகள் உண்மையான வாடிக்கையாளரால் செய்யப்படுகிறதா அல்லது ஏஐ பாட் மூலமாக செய்யப்படுகிறதா என்பதை துல்லியமாக கண்டறிவதில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக அமெரிக்க வங்கிகள் கூறுகின்றன.
இதனால் Morgan Stanley வங்கி ஏஐ ஏஜெண்டுகள் தங்கள் தளங்களுக்குள் நுழைவதை முற்றிலுமாக தடைசெய்யும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. JPMorgan Chase, Bank of America மற்றும் Citi பேங்க் போன்ற வங்கிகளும் இந்த மூன்றாம் தரப்பு ஏஐ ஏஜெண்டுகளின் அணுகலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் பாஸ்வேர்டுகளை யாருடனும் பகிர வேண்டாம் என ஜேபி மோர்கன் எச்சரித்துள்ளது.Wells Fargo நிறுவனமும் நவம்பர் 24 முதல் ஏஐ ஏஜெண்டுகள் தொடர்பான கூடுதல் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஏஐ கருவிகள் மூலம் தங்கள் வரவு-செலவுகளை திட்டமிட விரும்பும் நிலையில் வங்கிகள் ஒரு மாற்று வழியை யோசித்து வருகின்றன. அதாவது, ஏஐ ஏஜெண்டுகள் வாடிக்கையாளரின் கணக்கிலுள்ள பணத்தை மாற்றவோ அல்லது எதையும் வாங்கவோ முடியாது, மாறாக, தகவல்களை பார்க்க மட்டுமே உதவும் Read-Only அனுமதியை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
ஏஐ உதவியை பயன்படுத்தும்போது வங்கி பாஸ்வேர்டுகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக கணக்கின் அனுமதிகள் எங்கு, எதற்கு வழங்கப்படுகின்றன என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும், வங்கி பரிமாற்றங்கள் தொடர்பான அலர்ட்களை எப்போதும் ஆன் செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்துயுள்ளன.


Click it and Unblock the Notifications

