ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து விட்டது என்பதை நம்மால் மறுக்க முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே ஏஐ நாம் பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டோம்.
ஏஐ செயலிகள், ஏஐ ஏஜெண்டுகள் என ஒரு மின்னஞ்சல் எழுதுவது, கன்டென்ட் உருவாக்குவது, நம்முடைய சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளிப்பது என ஏஐ தொழில்நுட்பம் பரவலாக தற்போது பயன்படுத்தப்பட தொடங்கி விட்டோம். ஆனால் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு சில வரம்புகள் இருக்கின்றன. அதாவது மனிதர்களைப் போல சில வேலைகளை அதனால் செய்ய முடியாது.

ஆன்லைன் வேலைகளை செய்ய முடியுமே தவிர ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்வது அல்லது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒரு பொருளை கொண்டு சேர்ப்பது என பிசிக்கல் டாஸ்குகளை ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது. எனவே தற்போது ஏஐ தொழில்நுட்பம் தங்களுக்கான பிசிக்கல் டாஸ்குகளை மேற்கொள்ள மனிதர்களை வேலைக்கு அமர்த்த தொடங்கி இருக்கிறதாம்.
அதாவது ஆன்லைன் வேலைகளை ஏஐ பார்த்துக் கொள்ளும் அதற்கு தேவையான ஆஃப்லைன் வேலைகளை பார்க்க மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காகவே தற்போது பிரத்தியேக இணையதளமே உருவாக்கப்பட்டிருக்கிறது. https://rentahuman.ai/ என்ற ஒரு புதிய இணையதளம் இதற்காக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் ஏஐ ஏஜென்ட்கள் தங்களுக்கு தேவையான மனிதர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுமாம்.
அதாவது பிசிக்கலாக எங்கெல்லாம் தங்களுக்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்களோ அதற்கு எல்லாம் மனிதர்களை வேலைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. அதுவும் வாடகை முறையில். இந்த இணையதளத்தை உருவாக்கிய அலெக்ஸாண்டர் ஏஐ ஸ்மார்ட்டானது ஆனால் அதற்கு உடல் கிடையாது. அது தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் மனிதர்களின் உதவி தேவை எனவே தான் இப்படி ஒரு இணையதளத்தை உருவாக்கினோம் எனக் கூறியிருக்கிறார்.
வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு உணவு தருவது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டிராவல் செய்வது, ஒரு பிரசெண்டேஷனை மேற்கொள்வது, ஒரு குறிப்பிட்ட பொருளை ஓரிடத்தில் கொண்டு சேர்ப்பது, குறிப்பிட்ட நபருக்கு உதவியாளராக இருப்பது உள்ளிட்டவற்றுக்கெல்லாம் தற்போது மனிதர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறது என கூறுகிறார்.
ஏஐ ஆல் சிந்திக்க முடியும் முடிவெடுக்க முடியும் ஆனால் நேரடியாக நம்முடன் பேச முடியாது அல்லது ஓரிடத்திற்கு போக முடியாது. இந்த வேலைகளை மனிதர்கள் செய்யலாம் என்கிறார். கூடிய விரைவில் இதற்கும் நவீன திறன் கொண்டு ரோபோக்கள் வந்துவிடும் அதுவரை மனிதர்கள் இந்த வேலையை செய்ய முடியும் என்கிறார்.
உங்களுடைய பாஸ் ஏஐ அது என்ன சொல்கிறதோ அந்த வேலையை செய்து சம்பளம் வாங்கி கொண்டு செல்லலாம் என்கிறார். ஒரு மணி நேரத்துக்கு சுமார் 50 டாலர்கள் வரை சம்பளம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்கள் ஏஐ மூலம் வேலை செய்த காலம் போய் தற்போது ஏஐ மனிதர்களை வேலை வாங்கும் காலம் வந்துவிட்டது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications