செயற்கை நுண்ணறிவு (AI) அதிவேக வளர்ச்சி பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சாப்ட்வேர் இன்ஜினியிரிங் துறையில் இதன் தாக்கம் ஆழமாக இருக்கும் என்று ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறுகிறார். இதேவேளையில் சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ஓபன்ஏஐ புதிதாக ஏஐ ஏஜென்ட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த ஏஐ ஏஜென்ட்கள் பல வருட அனுபவம் கொண்ட சாப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் பணிகளைச் செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். இந்த ஸ்பெஷல் AI ஏஜென்ட்கள், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் விர்ச்சுவல் கோ வொர்க்கர் (Virtual Co worker) ஆக செயல்பட்டு, வழக்கமான கோடிங் மற்றும் டெவலப்மென்ட் நடவடிக்கைகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஏஜ ஏஜென்ட்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைவாக, சில நாட்களில் முடிக்க முடியும் என்றாலும், அவை இன்னும் மனித சாப்ட்வேர் இன்ஜினியிரின் மேற்பார்வை தேவைப்படும் ஒரு கட்டமைப்பாகவே உள்ளது எனவும் சாம் ஆல்ட்மேன் விளக்கியுள்ளார். இதேபோல் இந்த ஏஐ ஏஜென்ட்கள் புதுமையாக யோசித்து, தொழில்நுட்ப துறையை புரட்டிப்போடும் ஐடியாக்களை உருவாக்கும் திறன்கள் அதனிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஏஜ ஏஜென்ட்களை வைத்து 100 பேர் கொண்ட ஒரு டெக் நிறுவனத்தில் 150 பேர் பணியாற்றும் திறனை வெளிப்படுத்த முடியும், Productivity-ஐ பெரிய அளவில் அதிகரிக்க முடியும்.
ஓபன்ஏஐ இந்த AI ஏஜென்ட்களை இப்போதுதான் பயன்படுத்துகிறது என்றாலும், பிற பெரிய டெக் நிறுவனங்கள் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தை தங்கள் சாப்ட்வேர் டெவலப்மென்ட் பணிகளில் பயன்படுத்தி வருகிறது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் AI சேவைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், கோடிங் எழுதும் மிட் லெவல் இன்ஜினியரிங் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கும், இதன் மூலம் செலவுகள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல், கூகிள் பெரிய அளவிலான கோடிங் செயல்பாடுகளுக்கு AI பயன்படுத்தி வருகிறது. இப்போது கூகிளில் அனைத்து புதிய கோடிங் பணிகளிலும் AI ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது, இதேபோல் நிறுவனத்தில் 25 சதவீத கோடிங்-ஐ ஏஐ செய்து வருவதாக சுந்தர் பிச்சை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த மெட்டா, கூகுளில் இருக்கும் ஏஐ ஏஜென்ட்கள் அனைத்தும் அந்த நிறுவனத்திற்குள் பயன்படுத்துபவை, ஆனால் ஒபன் ஏஐ உருவாக்கியுள்ள ஏஐ ஏஜென்ட்கள் உலகில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடியவை என்பதால் சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகளவில் இதை பயன்படுத்தும். இதனால் சிறிய நிறுவனங்களில் புதிதாக உருவாக்கும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறையும், இதேபோல் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டலாம்.
ஆனால் பெரிய ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் இந்த ஏஐ ஏஜென்ட்களை அதிகளவில் பயன்படுத்தினால் முதலில் துவக்க நிவையில் இருந்து மிட் லெவல் வரையில் இருக்கும் அதிகாரிகளை அதிகளவில் பயணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன் பின்பு பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பது பெரிய அளவில் குறையும்.


Click it and Unblock the Notifications