HR ஊழியர்களே உஷார்.. உங்க வேலைக்கு பாதிப்பு.. AI - பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் புதிய பிரச்சனை..!

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மக்கள் வேலை செய்யும் முறை, கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, சுகாதாரப் பாதுகாப்பு பெறுவது மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையை தலைகீழாக மாற்றும் என்று பில் கேட்ஸ் ஒருமுறை கூறினார்.

பில் கேட்ஸ் கூறிய போது பலரும் மிகைப்படுத்திக் கூறுகிறார் என விமர்சனம் செய்தார், ஆனால் OpenAI நிறுவனம் ChatGPT மற்றும் GPT-4 அறிமுகம் செய்த பின்பு செயற்கை நுண்ணறிவு எதையெல்லாம் செய்யக்கூடும் என்பதை கண்டு பலரும் வியப்பு அடைந்துள்ளனர்.

HR ஊழியர்களே உஷார்.. உங்க வேலைக்கு பாதிப்பு..  AI - பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் புதிய பிரச்சனை..!

இந்த நிலையில் சூரிச் என்னும் காப்பீட்டுத் தளத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் Gen-Z பிரிவு மக்கள் உலகளவிலான பணியாளர்கள் பங்கீட்டில் சுமார் 27% பங்கு வகிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெவிக்கிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் மற்றும் large language module (LLM) போன்ற முக்கிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது மூலம் எதிர்கால பணியிடத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும். LLM அடிப்படையிலான AI சாட்போட் மனிதர்கள் ஒரு பணியை செய்ய எடுக்கும் நேரத்தில் 10 சதவீதத்தில் முடிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு சாட்போட் மிகவும் எளிதாக வேலைக்கு ஒருவரை நியமிக்க வேண்டுமாயின், ஒரு நபரை தானாக ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு, ஈமெயில் வாயிலாகவே முதல் நிலை தகுதியை சரிபார்க்க முடியும் என்று AI- அடிப்படையிலான SaaS தளமான KarmaV நிறுவனர் மற்றும் சிஇஓ-வான உஜ்ஜல் டி தெரிவித்துள்ளார்.

AI மற்றும் பிளாக்செயின் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்தில் இருக்கும் கடுமையான பணிகளில் ஒன்றான Human Resources பணியை எளிதாக்க முடியும்.

HR ஊழியர்களே உஷார்.. உங்க வேலைக்கு பாதிப்பு..  AI - பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் புதிய பிரச்சனை..!

AI- அடிப்படையிலான மென்பொருள் மற்றும் பிளாக்செயின் இணைந்து காலி பணிகளான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்களை தானாக எழுதி அனுப்புதல், HR பிரிவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை சரிபார்த்தல், ஆராய்ச்சி அறிக்கைகளை எளிதாக்குதல், பணியாளர் சர்வே உருவாக்குதல், சென்டிமென்ச் அனலிசிஸ், ஊழியர்களின் தரவைப் பாதுகாப்பது போன்ற பலவற்றைச் செய்யலாம் என ValueMatrix.ai நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா மாலிக் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது 2030-க்குள் AI சந்தை சுமார் 20 மடங்கு வளர்ச்சி அடைந்து 2 டிரில்லியன் சந்தையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் ஆரம்பம் ChatGPT ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டு 2 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+