சென்னை: 2024ஆம் ஆண்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) வளர்ச்சி எங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அதில், இந்தியா முன்னணியில் உள்ளது. மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் லிங்க்டின் (Linkedin) இணைந்து நடத்திய ஆய்வின்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய தொழிலாளர்களில் 92% பேர் தங்கள் தினசரி வேலைக்காக AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இது உலக அளவில் சுமார் 75% அதிகமாகும். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சில தொழிலாளர்கள், தங்கள் சக ஊழியர்கள் தங்களை 'சோம்பேறி' (lazy) அல்லது 'ஏமாற்றுபவர்கள்' (frauds) என்று நினைப்பார்களோ என்ற கவலை கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anthropic என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனமும், Asana என்ற பணி மேலாண்மை தளமும், சமீபத்தில் தங்களது 2024ஆம் ஆண்டின் "State of AI at Work" என்ற அறிக்கையை வெளியிட்டன. 5000-திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில், கால் பகுதிக்கு மேற்பட்டவர்கள், தங்கள் வேலையில் AI-ஐப் பயன்படுத்தினால் "சோம்பேறி" என்று கருதப்படுவோமோ என்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கூடுதலாக, 23% பேர் AI கருவிகளைப் பயன்படுத்துவதற்காக "ஏமாற்றுபவர்கள்" என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று அஞ்சுகின்றனர்.

Asana's Work Innovation Lab என்ற நிறுவனத்தின் தலைவர் Rebecca Hinds, CNBC உடனான பேட்டியில், இது போன்ற அச்சம் ஏற்படுவதற்கான காரணம், அந்தந்த ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் AI பயன்பாடு குறித்தத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்காததே என்று கூறியுள்ளார். அதனால் தான் அவர்களை, அவர்களே "சோம்பேறித்தனமானவர்கள்" மற்றும் "ஏமாற்றுபவர்கள்" என்ற உணர்வுடன் பார்க்கத் தொடங்குகின்றனர். நிறுவனச் சூழல் AI பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் மற்றும் லிங்க்டின் ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை எடுத்துக்காட்டியுள்ளது. அனுபவத்தை விட AI திறன்களுக்குத் தெளிவான முன்னுரிமை உள்ளது. அந்த ஆய்வின்படி, இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் 80% பேர், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை விட, AI திறன்களைக் கொண்ட குறைந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்களையே விரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் AI பயன்படுத்துவதால் பிற நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் 54 சதவீதம், தங்கள் நிறுவனத்திற்கு தெளிவான திட்டம் இல்லை என்று தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications