டெக் உலகில் புதிதாக பிரவுசர் போர் உருவாகி வருகிறது, ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேளையில் வெறுமென இதை சாட்பாட் ஆக பயன்படுத்தாமல் அப்பிளிகேஷன் லேயரில் பயன்படுத்தும் முயற்சிகள் பெருமளவில் துவங்கியுள்ளது. இதன் துவக்க புள்ளியாகவே பிரவுசர் போர் உருவாகியுள்ளது.
பிரவுசர் போர் என்பது இன்று நேற்று உருவானது இல்லை, 1990களில் இருந்து சந்தையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் தான் மாறி வருகிறார்கள், ஒரு காலத்தில் யாஹூ, மற்றொரு நேரத்தில் மைக்ரோசாப்ட்-ன் Internet Explorer, இதன் பின்பு சீனா பிரவுசர்கள் என போட்டியாளர்கள் மாறினாலும் ஓரே இடத்தில் சிங்கம் போல் நின்று எதிர்த்து போட்டிப்போடுவது கூகுள் குரோம்.

ஏஐ தொழில்நுட்பத்தின் பவர் மிகவும் அதிகம் என்பதால் தற்போது ஏஐ அடிப்படையிலான பிரவுசர் போர் உருவாகியுள்ளது. இந்த போட்டியில் கூகுள் வீழ்ந்துவிடும் என்ற பேச்சு அதிகமாகவும் இருக்கிறது. அடுத்தடுத்து ஏஐ நிறுவனங்கள் புதிய பிரவுசர்களை அறிமுகம் செய்துள்ளதால் போட்டி கடுமையாகி வருகிறது.
ஏஐ பிரவுசர் போர்
சாட்ஜிபிடி உருவாக்கி ஏஐ உலகில் புதிய போட்டி, பாதையை உருவாக்கியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை தனது புதிய பிரவுசரான சாட்ஜிபிடி அட்லஸ்-ஐ அறிமுகப்படுத்தியது.
இது, கூகுள் குரோம், ஓபரா, பிரேவ் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டியின் கோமட் போன்ற முன்னணி பிரவுசர்களுக்கு போட்டியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு, இணையப் பயன்பாடு மற்றும் விளம்பர வருவாயை கைப்பற்றுவதற்கு ஓபன் ஏஐயின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், கூகுள் ஏற்கனவே தனது ஜெமினி தொழில்நுட்பத்துடன் பிரவுசர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதால், இந்தப் போரில் ஓபன் ஏஐ பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்பதே நிதர்சனம் என டெக் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதேவேளையில், மைக்ரோசாப்ட் தனது எட்ஜ் பிரவுசர்யில் கோபைலட் மோட் எனும் ஏஐ அம்சத்தை இன்று அறிமுகப்படுத்தி, இந்தப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சாட்ஜிபிடி அட்லஸின் அறிமுகம்
ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ், குரோமியம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வெப் பிரவுசர் ஆகும். அதாவது கூகுள் குரோமில் உள்ள அனைத்து எக்ஸ்டென்ஷன்ஸ் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரவுசர்.
ChatGPT Atlas-ல் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை பிரவுசரில் ஒருங்கிணைத்து, பயனர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓபன் ஏஐயின் தற்போதைய 800 மில்லியன் பயனர்களில் கொண்டுள்ளது, இதில் பெரும்பாலான மக்கள் இலவச சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த பிரவுசர், விளம்பர வருவாய் மற்றும் இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும் ஒரு தனித்துவமான தயாரிப்பாக இருக்கும். இது கூகுள் குரோம்-க்கு போட்டியாக இருக்கும் என கூறப்பட்டாலும், ChatGPT Atlas பிரவுசர் சந்தையில் இடம் பிடிக்க, மக்கள் இதை தங்களது தினசரி வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. இப்போது தான் சாட்ஜிபிடி நினைத்ததை சாதிக்க முடியும்.
கூகுள் தான் எல்லாமே
எப்படி சாட்ஜிபிடி அட்லஸ், குரோமியம் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ, அதேபோல தான் பெர்ப்ளெக்ஸிட்டியின் கோமட் பிரவுசர்-ம் குரோமியம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி ஆகியவை தனது ஒவ்வொரு Query, Search-ல் கூகுள்-ஐ நம்பி தான் இயக்குகிறது என கருத்து நிலவுகிறது. அதாவது சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி-யில் மக்கள் தங்கள் கேள்விகளை கேட்கும் போது இதன் தொழில்நுட்பம் கூகுள் சர்ச் இன்ஜின் பயன்படுத்தி டாப் பதில்களை தேர்வு ஆய்வு செய்து, கேள்விக்கு தேவையான பதிலை தனது சொந்த தொழில்நுட்பம் மூலம் தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது.
இப்படி பல கட்டத்தில் சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி ஆகியவை கூகுள்-ஐ நம்பி இயங்குகிறது. இரு தளமும் ஆரம்பக்கட்டத்தில் மைக்ரோசாப்ட் Bing சர்ச் இன்ஜின்-ஐ பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் சர்ச் இன்ஜின்-ஐ சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி ஆகிய இரண்டும் சொந்தமாக web crawling infrastructure மற்றும் indexing/ranking algorithm-களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் வரும் நாட்களில் சொந்தமாக சர்ச் இன்டெக்ஸ் முறையை உருவாக்கி சொந்தமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் எதிர்ப்பு நிலை
சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி மட்டும் அல்லாமல் பல்வேறு ஏஐ நிறுவனங்கள் மறைமுகமாக கூகுள் சர்ச் இன்ஜின்-ஐ பயன்படுத்துகிறது என்பதை உணர்ந்த கூகுள் நிர்வாகம், சர்ச் விபரத்தை காட்டுவதில் புதியமாற்றங்களை செய்துள்ளது. இதுவும் தற்போது ஏஐ நிறுவனங்களுக்கு தலைவலியாக மாறி வருகிறது.
கூகுளின் அட்சய பாத்திரம்
சுந்தர் பிச்சை தலைமையில் இயங்கும் கூகுளின் வருவாய் அட்சய பாத்திரமாக விளங்குவது கூகுள் குரோம் தான். இத்தளத்தின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் தான் ஜெமினி ஏஐ வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளது.
இப்படியிருக்கையில், குரோம் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சியில் தான் அடுத்தடுத்து ஏஐ நிறுவனங்கள் பிரவுசர்-ஐ அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் சந்தையில் நடக்கும் விஷயமே வேறு.
கூகுளின் ஆதிக்கம்
கூகுள் குரோம், உலகளவில் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு, பிரவுசர் சந்தையில் முன்னணியில் உள்ளது. கூகுள், தனது ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தை குரோமில் ஏற்கனவே பல இடத்தில் ஒருங்கிணைத்து, பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இதோடு கூகுளின் மற்ற முக்கிய சேவைகளான ஜிமெயில், டாக்ஸ், சரச், கூகுள் மீட், டிரைவ் என அனைத்துக்கும் குரோம் தான் நுழைவாயிலாக உள்ளது. இதேபோல் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனிலும் குரோம் மற்றும் கூகுள் சர்ச் தான் அடிப்படையாக உள்ளது.
கூகுள் ஏற்கனவே தனது அனைத்து சேவையிலும் ஏஐ பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் கூகுள் நிறுவனம், மக்கள் தினசரி பயன்படுத்தும் டிஜிட்டல் கட்டமைப்பில் ஏஐயை இயல்பாக இணைத்துள்ளது. இப்படியிருக்கையில் மைக்ரோசாப்ட், சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி-யின் முயற்சிகள் அதிகப்படியான சவால்களை எதிர்கொள்ளும்.

மைக்ரோசாப்டின் பதிலடி
ஓபன் ஏஐயின் அட்லஸ் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் தனது முக்கிய தயாரிப்பான மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர்யில் கோபைலட் மோட் என்ற புதிய ஏஐ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது, வெறும் பிரவுசர் நீட்டிப்புக்கு அப்பாற்பட்டு, மைக்ரோசாப்டின் ஏஐ பிரவுசர் வகையாக உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறசு.
இந்தப் புதிய அம்சங்கள், ஏஐ பிரவுசர் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதேவேளையில் மைக்ரோசாப்ட், சாட்ஜிபிடி, பெர்ப்ளெக்ஸிட்டி இணைந்து ககுள் சர்ச் மற்றும் பிரவுசர் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மக்கள் எந்த அளவுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் இதன் வெற்றி உள்ளது.
ஏஐ பிரவுசர் போரின் எதிர்காலம்
இந்த ஏஐ பிரவுசர் போர், தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. ஓபன் ஏஐயின் அட்லஸ், தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், சந்தை ஆதிக்கத்தைப் பெறுவதில் பெரும் சவால் உள்ளது.
கூகுளின் குரோம் மற்றும் மைக்ரோசாப்டின் எட்ஜ் ஆகியவை, ஏற்கனவே அதிகளவிலான பயனர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து முன்னேறி வருகின்றன. மக்கள் மேம்பட்ட ஏஐ அனுபவங்களை எதிர்பார்க்கும் இந்த சூழலில், இந்த மூன்று நிறுவனங்களின் உத்திகள் உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

ஆந்த்ரோபிக் எடுத்த முடிவு.. கடுப்பான டிரம்ப்.. ஆடிப்போன பென்டகன்..!!

இரவோடு இரவாக நடந்த டீலிங்.. பென்டகன் உடன் கைகோர்த்த OpenAI.. சாம் ஆல்ட்மேன் டிவீட்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications