இணையத்தில் மக்களின் தேடல்களை புரிந்துக்கொள்வது தான் இன்றைய இணைய வர்த்தகத்தின் முக்கிய இலக்காக உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் மக்கள் அதிகம் தேடி விஷயங்களின் பட்டியல் வெளியாகும். ஆனால் சமீபத்தில் இணையத்தில் புது புது விஷயங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள காரணத்தால் திடீர் திடீரென சர்ச் டிரெண்டுகள் உருவாகி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவிலும், உலகளவிலும் AI bubble என்ற சொல்ல மக்கள் மத்தியில் பிரபலமாகி புது டிரெண்ட்-ஐ உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் வேளையில் இத்துறையில் பெரும் சரிவு வருவாதாக மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. இதன் வாயிலாக 'ஏஐ பபுள்' என்ற சொல்லுக்கான கூகுள் சரச் டிராபிக் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க மக்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இன்வெஸ்ட்மென்ட் பபுள் குறித்த கவலை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதுக்குறித்து தெரிந்துக்கொள்ள மக்கள் கூகுள் சர்ச் இன்ஜினில் "AI bubble" என்பதை அதிகளவில் தேடியுள்ளனர்.
AI bubble-க்கான சர்ச் வால்யூம் கடந்த ஆண்டைவிட 950 சதவீதம் உயர்ந்துள்ளது. கூகுள் ட்ரெண்ட்ஸ் தரவுகளின்படி, நவம்பர் 15 வரையிலான வாரத்தில் AI bubble என்பதற்கான தேடல் எண்ணிக்கை 8லிருந்து 84 ஆக உயர்ந்துள்ளது, நவம்பர் 1 வாரத்தில் 100 என்ற உச்சத்தைத் தொட்டது.
இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான், ஆனால் கால அட்டவணை மட்டும் மாறியுள்ளது. இந்தியாவில் நவம்பர் 8ஆம் தேதி முடிந்த வாரத்தில் AI bubble என்பதற்கான தேடல் எண்ணிக்கை 100ஐ தொட்டு உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வாரத்தில் வெறும் 20 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் டெக் மையங்களான வாஷிங்டன் டிசி, வாஷிங்டன் மாநிலம், மாசசூசெட்ஸ், மேரிலாந்து மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் AI bubble என்பதற்கான தேடல் மிக அதிகமாக உள்ளது எனவும் பின்போல்டு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏஐ துறையில் குவியும் முதலீடு மற்றும் அதை சுற்றி உருவாகும் அச்சங்களை பார்க்கும் போது 1990களின் பிற்பகுதியில் உலக நாடுகளில் வெடித்த டாட்காம் பபுளை நினைவுபடுத்துவதாக பலரும் அஞ்சுகின்றனர். இக்காலக்கட்டத்தில் இணைய சேவை நிறுவனங்கள், டெக் நிறுவனங்களில் முதலீடு குவிந்தது மட்டும் அல்லாமல் அதிகப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலானவை லாபம் ஈட்ட முடியாமல் திவாலாகின.
இதேபோல் இன்று ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மதிப்புகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன, ஆனால் அவற்றின் வருவாய் இன்னும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. சிறிய நிறுவனங்களுக்கு தான் இந்த நிலையா என்றால் இல்லை, பெரிய நிறுவனங்கள் டேட்டா சென்டர் மற்றும் கம்பியூட்டிங் உள்கட்டமைப்புகளுக்கு பல்லாயிரம் கோடி டாலர்களை செலவிடுகின்றன, ஆனால் குறுகிய காலத்தில் போதிய வருவாய் கிடைக்கும் என்பதற்கு தெளிவான சூழ்நிலை இல்லாதது தான் தற்போது ஏஐ பபுள் உருவாகியுள்ளதா என்ற அச்சம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications