செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன. வேலை ரீதியாகவும், தொழிலை மேம்படுத்துவதற்கும் அடுத்த கட்டமாக பதவி உயர்வு பெறுவது , புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஏஐ கருவிகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிலர் இவற்றை சில தவறான செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் அதுவும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது சட்டப்படி குற்றம். அதாவது குழந்தை கருவில் இருக்கும் போதே ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய முடியாது. ஸ்கேன் மையங்கள், மருத்துவர்கள் இந்த தகவல்களை பெற்றோரிடம் தெரிவிக்க கூடாது. கருவின் பாலினத்தை முன்கூட்டியே பெற்றோரிடம் தெரிவித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மருத்துவமனைக்கே சீல் வைக்கப்படும்.

ஏனெனில் இந்தியாவில் நீண்ட காலமாகவே பெண் குழந்தைகள் என்றாலே கருக்கலைப்பு செய்து விடும் போக்கு இருந்தது. இதனால் இந்தியாவில் குழந்தை பாலின விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் விளைவாக தான் கடுமையான இந்த சட்டமே நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி ஒரு குழந்தையின் பாலினம் என்ன என்பதை குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை பெற்றோரால் தெரிந்து கொள்ள முடியாது. மருத்துவர்களும் சரி ஸ்கேன் செய்யக்கூடிய நிறுவனங்களும் சரி அந்த தகவல்களை பெற்றோரிடம் தெரிவிக்கவே கூடாது.

ஆனால் தற்போது இதற்கு தான் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. லிங்குடின் பக்கத்தில் சித்தார்த் பார்கவா என்ற மருத்துவர் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் பெற்றோர் தங்களுடைய கருவின் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் புகைப்படங்களை ஏஐ கருவிகளில் பதிவேற்றி குழந்தையின் பாலினம் என்பதை தேடுகிறார்கள், இதனை கேட்கும்போதே எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறியிருக்கிறார். இந்தியாவில் இது சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஒரு மருத்துவர் இதை செய்தால் அவருடைய உரிமம் பறிக்கப்படும், அவருடைய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும், சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். ஆனால் இந்த டெக்னாலஜியை மக்கள் தற்போது தவறான வழிகளில் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏஐ கருவிகளுக்கு இந்திய சட்டங்கள் தெரியாது, இந்தியாவின் சமூக வரலாறு தெரியாது, சில விஷயங்களை எப்பொழுதும் வெளிப்படையாக தெரிவிக்க கூடாது என்பதும் அதற்கு தெரியாது. இதுதான் பெரிய கவலையாக உருவெடுத்து இருக்கிறது என கூறுகிறார். பல ஆண்டுகளாக பாலின சமத்துவம், வேண்டும் பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து இந்த சமூகம் முன்னோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் அதனை பின்னோக்கி கொண்டு சென்று விடுமோ என அவர் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய கருத்தாக இருக்கிறது. பல்வேறு மருத்துவர்களும் கூட இதே கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஏஐ கருவிகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய நிறுவனங்களும், அரசுதான் இதற்கு முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என்பதே பலரின் கருத்து.
ஏனெனில் மத்திய அரசு ஏஐ தளங்களுக்கு தெளிவான சட்டப் பொறுப்புகளை உருவாக்க வேண்டும். பாலினத்தை அறிவது, கருவின் ஸ்கேன் படங்களை ஏற்றி குழந்தையின் கருவை கண்டறிவதற்கான பிராம்ப்டுகளை உள்ளீடு செய்தாலும், அதற்கான நோக்கத்திற்காக தான் குறிப்பிட்ட இந்த கேள்வி கேட்கப்படுகிறது என்றாலும் ஏஐ கருவிகள் பதில் அளிக்காத வகையில் மத்திய அரசு ஏஐ நிறுவனங்களிடம் நாட்டின் சட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அதற்கான அபராதங்கள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த டிரெண்ட் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications